உன் ஆட்டம் ஓவர்… சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நயன்தாரா..

0
Follow on Google News

மூக்குத்தி அம்மன் படம் ஆர்.ஜே பாலாஜி, நடிகை நயன்தாரா, ஊர்வசி, நடிகர் மௌலி என பல முன்னணி நடிகர்கள் நடித்து 2020ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.ரேடியோ ஜாக்கியாக பிரபலமான ஆர்ஜே பாலாஜி, பின்னர் சினிமாவிலும் காமெடியனாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்த ஆர்ஜே பாலாஜி, NJ சரவணனுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார்.

நயன்தாரா அம்மன் கேரக்டரிலும், ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி ஆகியோர் லீட் ரோலிலும் நடித்திருந்தனர். இந்த படம் 2020 நவம்பர் 14ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. அம்மன் கேரக்டரில் நயன் ஸ்கோர் செய்ய, மேக்கிங், வசனம் ஆகியவற்றில் ஆர்.ஜே பாலாஜி இயக்குநராக சிக்ஸர் அடித்திருந்தார்.

காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தில் நயன் கேரக்டருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. இதனால் நயன்தாரா கேரியரில் மூக்குத்தி அம்மன் தரமான படமாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. முக்கியமாக சில தினங்களுக்கு முன்பாக மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தில் நயனுக்குப் பதிலாக த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படிருந்தது.

அதேநேரம் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தான் நயன் இல்லனா த்ரிஷா என மூக்குத்தி அம்மன் 2 காம்போவை ஆர் ஜே பாலாஜி மாற்றிவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகம் இல்லை, அது வேறு படம் எனவும்,

இந்தப் படம் மூக்குத்தி அம்மன் போல ஃபேண்டஸியாக இருக்கும் எனவும், அதிலும் நடிகை த்ரிஷா அம்மன் வேடத்தில் கலக்கி இருப்பார் எனவும், டைட்டிலை மாற்றவும் ஆர் ஜே பாலாஜி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வதந்திங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பட்டிருந்தது. இந்நிலையில் இது என்னடா மூக்குத்தி அம்மன் படத்திற்கு வந்த சோதனை என மீண்டும் இப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கப்போவதில்லை எனவும், அந்த படத்தை இயக்க பல இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும். தற்போது மூக்குத்தி அம்மன் படத்தை இயக்க சுந்தர். சி ஒப்புக்கொண்டதாகவும் உறுதிப்பட தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சுந்தர் c தனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் கலகலப்பு 3 திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில்,

இந்த இரு படங்களில் எந்த படத்தை அவர் முதலில் இயக்குவார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆர் ஜே பாலாஜி தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் படங்களில் அரசியல் நையாண்டியை கலந்து சிறப்பான திரைக்கதையை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை அதே போன்ற ஜானரில் சுந்தர் சி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.