கோடிகளில் சம்பாதிக்கும் நயன்தாரா சமீப காலமாக தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார் . நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் தனக்காக வேலை செய்ய வரும் துணையாட்களுக்கு சம்பளம் தர மாட்டாராம், அவர் எந்த படத்தில் கமிட்-ஆகி இருக்கிறாரோ அந்த படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்.
மேலும் நடிகை நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்ளிட்ட ஆறு பேர் வரிவார்கள். ஒவ்வொருவருக்கும் தினமும் 12,000 முதல் 15,000 வரை தயாரிப்பாளர்கள் பேட்டா கொடுக்க வேண்டி உள்ளது. இதன் மூலம் தினமும் தயாரிப்பாளர்களுக்கு 60,000 முதல் 70 ஆயிரம் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட படப்பிடிப்பிற்கு நயன்தாரா தன் குழந்தைகளுடன் சென்றிருக்கிறார். அங்கு நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஆயாவிற்கு கூட அப்படத்தின் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது என்னடா தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனை என பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்த நயன்தாராவின் சம்பளம் மட்டுமே 10 கோடி, அந்த வகையில் திரை அரங்கில் வெளியாகி படுதோல்வி அடைந்த அன்னபூரணி திரைப்படம் வெறும் 85 லட்சம் தான் வசூல் ஆகி இருந்தது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நயன்தாரா, அன்னபூரணி படத்தின் வசூல் 85 லட்சம் கூட தேறாத நிலையில் இனி நயன்தாராவை வைத்து யாரும் படம் எடுக்கவும் மாட்டார்கள், அந்த வகையில் இத்துடன் நயன்தாராவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது என கூறப்பட்டது.
இந்நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது, சுந்தர் சி என்ன சம்பளம் கேட்கிறாரோ அதற்கு ஒப்புக்கொண்டு, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஐஸ் ஏரி கணேசன்.
அதே நேரத்தில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவின் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்து, பலரும் நயன்தாராவை புறக்கணித்து வரும் நிலையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் சாய்பல்லவி மற்றும் ரஷ்மிக்கா மந்தானா ஆகியோர் இருந்து வருகிறார்கள், இந்த நிலையில் மூக்கத்தி அம்மன் 2 படத்தின் மூலம், எப்படி ராஜா ராணி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தேனே,
அதே போன்று மூக்குத்தி அம்மன் 2 இரண்டாவது ரீ என்ட்ரி படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கிறார் நயன்தாரா. மேலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு சம்பளம் மட்டுமல்லாமல், அந்த படத்தில் வரும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஷேரும் கொடுக்க வேண்டும் என்று நயன்தாரா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நயன்தாரா நடிப்பில் கதாநாயகி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்த அறம் படத்திற்குப் பின்பு பலரையும் கவர்ந்த படம் மூக்குத்தி அம்மன் தான். அப்படி இருக்கையில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் 62 ஆவது படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்த நிலையில்,
அந்த வாய்ப்பு கைவிட்டுப் போனது அதேபோன்று விஜய் நடித்த லியோ படத்தில் திரிஷா ரீ என்ட்ரி கொடுத்து, அடுத்த அஜித் நடித்த குட் பேட் அட்லி படத்திலும் கமிட் ஆயிருந்தார். அந்த வகையில் நயன்தாராவை கோலிவுட் தமிழ் திரையுலகம் முற்றிலுமாக புறக்கணித்தது. தற்பொழுது மீண்டும் மூக்குத்தி அம்மன் 2 படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தன்னை புறக்கணித்த அனைத்து நடிகர்களும் என்னை தேடி வர வேண்டும் என்று சவால் விட்டு மூக்குத்தி அம்மன் படத்தில் மீது நம்பிக்கையில் இருக்கிறார் நயன்தாரா என்று கூறப்படுகிறது.