ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.. வாங்கிய பணத்தை திருப்பி கொடு.. நயன்தாராவுக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட அவமானம்..

0
Follow on Google News

இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் ஏழு வருடங்கள் காதலித்து வந்த நடிகை நயன்தாரா கடந்த வருடம் சென்னை மகாபலிபுரம் அருகே முக்கிய விஐபிகள் மட்டும் பங்குபெறும் வகையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருந்த நயன்தாரா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் பாலிவூட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்று திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து சினிமாவில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள திட்டமிட்டிருந்தார் நயன்தாரா. அதற்கு ஏற்றார் போல் திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து படத்தில் நடிப்பதற்காக அவருடைய கைவசம் பல படங்கள் இருந்தது, மேலும் திருமணம் முடிந்து ஹனிமூன் முடித்த கையோடு ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு பின்பு நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட் ஆகிய படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்தது, மேலும் இரண்டு படங்களும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதால் இந்தப்படத்தின் முழு தோல்விக்கும் நயன்தாரா தான் காரணம்என்றும், இயக்குனர் சொல்வதை கேட்க்காமல், படப்பிடிப்பில் பல குளறுபடியை நயன்தாரா ஏற்படுத்தியதால் தான் இந்த இரண்டு படங்களும் மிக பெரிய தோல்வியை சந்தித்து என்கிற குற்றசாட்டு சினிமா வட்டாரத்தில் பரவியது.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை இரண்டு படங்களில் நயன்தாரா நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து அந்த இரண்டு படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு ஒரு படத்திற்கு தலா 5 கோடி சம்பளம் விகிதம் மொத்தம் 10 கோடி சம்பளம் பேசப்பட்டு, அதற்கான அட்வான்ஸ் தொகையும் கொடுத்து நயன்தாராவை ஒப்பந்தம் செய்து, இரண்டு படத்தில் நடிக்க கால் சீட் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் நயன்தாரா நான் ரெம்ப பிசி என அவருடைய திருமணம் வரை கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார், இருந்தும் திருமணத்திற்கு பின்பு கால் சீட் கொடுப்பார் நயன்தாரா என நம்பிக்கையுடன் காத்திருந்தார் தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை, ஆனால் நயந்தாரா தரப்பில் இருந்து முறையான தகவல் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் தற்பொழுது நயந்தாரா மார்க்கெட் பாதாள பள்ளத்தில் விழுந்துள்ளது.

இனி நயந்தாரா நடித்தாலும், அந்த படத்திற்கு வரவேற்பு இல்லாத சூழல் தற்பொழுது உள்ளது, இதனால் நயன்தாரா கால் சீட் கொடுத்து நடித்தாலும், அந்த படம் தோல்வியை கொடுத்து தமக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை, நேரடியாக நயந்தாராவை சந்தித்து இனி உங்கள் கால் சீட் எனக்கு தேவையில்லை, நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுங்க என கேட்டுள்ளார்.

அதற்கு சார் எப்ப படம் ஸ்டார்ட் பன்றிங்க என்று சொல்லுங்க, கால் சீட் தருகிறேன் என நயன்தாரா தெரிவிக்க, உங்களுக்கு இப்போது மார்க்கெட் இல்லை, அதனால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று பிடிவாதமாக கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கிவிட்டு சென்றுள்ளார். இதே போன்று தயாரிப்பாளர் SR பிரபு இதற்கு முன்பு நயன்தாரா அவருடைய தயாரிப்பில் நடிக்க ஒரு படம் ஒப்பந்தம் செய்திருந்தார்.

அவரும் நயன்தாராவை சந்தித்து உங்கள் கால் சீட் தேவையில்லை என கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா கால் சீட் கொடுக்கிறேன் என்று சொன்னால் கூட, இனிமே நீ வயசுக்கு வந்தால் என்ன.? வரவில்லை என்றால் என்ன.? என்கிற கவுண்டமணி காமெடி காட்சியில் வருவது போன்று மார்க்கெட் இல்லாத நீ கால் சீட் கொடுத்தால் என்ன.? கொடுக்க வில்லை என்றால் என்ன.? என்று நயன்தாராவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி விட்டு சென்று வருவது நயன்தாராவுக்கு சினிமா வட்டாரத்தில் மிக பெரிய அவமானமாக அமைத்துள்ளது.