சமீப காலமாக தமிழ் சினிமாவில் இடம் பெரும் காட்சிகள் மிகப்பெரிய சர்ச்சையாகி அது அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறி வருகிறது. அண்மையில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தில் “பகவான் ஸ்ரீ ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார்” என்று இடம்பெற்றிருந்த வசனங்கள் மற்றும் காட்சிகள் பூதாகர பிரச்சனைகளாக வெடித்தது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிய அன்னபூரணி படம் நெட்லிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
பகவான் ராமரை சீண்டி நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது பெரியாரை சீண்டி சந்தானம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தானம் நடிப்பில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. நடிகர் சந்தானமும் படத்தின் டிரைலர் காட்சிகளை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
அந்த ட்ரெய்லரில், இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று ஒருவர் கேட்க.. சந்தானமோ பொறுமையாக சாமிக்கு கற்பூரம் ஏற்றி நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூர தட்டினை ஏந்தி நிற்கிறார். இந்த காட்சியும் வசனமும் ஈவே ராமசாமியை கிண்டலடிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக திராவிடர் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற பெயரைத்தான் படத்தின் டைட்டில் ஆகவும் சந்தானத்தின் பெயராகவும் வைத்திருப்பதாக படகு குழுவின் தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்பொழுது அதே பெயரால் மிகப்பெரிய சர்ச்சையும் வெடித்துள்ளது.அதாவது ஈ வெ ராமசாமி.. ‘கடவுள் இல்லை.. கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், அவரது கருத்தை கிண்டல் அடிக்கும் வகையில் ட்ரெய்லரில் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்று இருக்கிறது என்று அரசியல் கட்சியினர் சந்தானத்தை கடுமையாக சாடி வந்த நிலையில், இந்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து சம்பந்தபட்ட அந்த வீடியோவை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இந்த சர்ச்சையில் சந்தானத்துக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதோ அதே அளவு ஆதரவும் கிளம்பியுள்ளது.
ஏற்கனவே, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றிருந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் நடிகை நயன்தாராவின் அன்னபூரணி படம் netflix தளத்திலிருந்து நீக்கப்பட்டது போன்று சந்தானம் நடிப்பில் வடக்கப்பட்டி ராமசாமி படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை கூறிய வசனம் நீக்கப்படுமா.? என்கிற விவாதம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாயன்தாரா அன்னபூரணி படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய ஸ்ரீ ராமர் குறித்த வசனத்திற்க்கு எதிர்ப்பு கிளம்பிய போது, இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது, சினிமாவை சினிமாவாக பாருங்க என்று நயன்தாராவுக்கு குரல் கொடுத்தவர்கள் தான் தற்பொழுது சந்தானம் பேசியுள்ள ராமசாமி வசனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், அதே போன்று நயன்தாரா இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என அன்னபூரணி படத்திற்கு எதிராக பொங்கியவர்க்ள, தற்பொழுது சந்தனம் பேசி சர்ச்சைக்குரிய ராமசாமி வசனத்தை அதிகம் பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.