சமீபகாலமாக நடிகை நயன்தாராவின் அட்ராசிட்டி குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட நயன்தாராவின் முகத்திரை கிழிக்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் நயன்தாராவின் இமேஜ் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து நயன்தாராவின் எல்லை மீறி அட்ராசிட்டி குறித்த மற்றொரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
நயன்தாரா ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்த இறைவன் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு 15 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். வெறும் 15 நாள் கால் சீட்டுக்கு எட்டு கோடி சம்பளம் நயன்தாராவுக்கு பேசப்பட்டிருக்கிறது. மேலும் நயன்தாராவின் அசிஸ்டன்ட் களுக்கு தனியாக நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட ஒரு சம்பளத்தொகை பேசப்பட்டிருக்கிறது.

இறைவன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல் இரண்டு நாட்கள் ஒழுங்காக வந்த நயன்தாரா, மூன்றாவது நாள் பட குழுவுக்கு சில கண்டிஷங்களை போட்டு இருக்கிறார். அதாவது என்னால் காலையில் படப்பிடிப்புக்கு வர முடியாது, மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் நான் நேரம் கொடுக்கிறேன். அந்த டயத்துக்குள் நான் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நயந்தாரா கண்டிசன் போட்டு இருக்கிறார்.
என்னடா இது .? நயன்தாராவை இந்த படத்தில் கமிட் செய்வதற்கு முன்பே இப்படி ஒரு கண்டிஷனை போட்டு இருந்தால் நாம் ஒப்பந்தமே செய்திருக்க மாட்டோம், இரண்டு நாட்கள் பல முக்கியமான காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென்று நயன்தாரா இப்படி ஒரு கண்டிஷனை போடுவதால், பகலில் எடுக்க வேண்டிய காட்சிகளை எப்படி மாலை நேரங்களில், இரவு நேரங்களில் எடுக்க முடியும்.
குறிப்பாக ஆறு மணிக்கு மேல் வெளிச்சம் பிரச்சினையாக இருக்கும், இரவு காட்சிகளுக்கு தான் அது செட் ஆகும் என்கின்ற மிகப்பெரிய குழப்பத்தில் இயக்குனர் இருந்திருக்கிறார். அதே நேரத்தில் நயன்தாராவை உடனே தூக்கி விட்டு வேற நடிகையையும் ஒப்பந்தம் செய்ய முடியாது, காரணம் 2 நாள் படப்பிடிப்புக்கு வந்து விட்டார் நயன்தாரா. அவருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி ஒரு சொல்லலில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் சென்று பேசியிருக்கிறார்கள். மேடம் பகலில் எடுக்க வேண்டிய காட்சிகளை நீங்கள் மதியம் ரெண்டு மணிக்கு வருவதால் மாலை 6 மணிக்கு மேல் இருட்டாகிவிடும். எப்படி மாலை நேரங்களில் எடுக்க முடியும். மேலும் மற்ற ஆர்ட்டிஸ்கள் எல்லாம் காலையில் வந்து விடுவார்கள், உங்களுக்காக அவர்கள் மதியம் வரை காத்திருக்க வேண்டும், என்றெல்லாம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் அசிஸ்டன் டைரக்டர்.
ஆனால் நயன்தாரா எவ்வளவு நாளா நீ இந்த சினிமா துறையில் இருக்கிற என்று அந்த உதவி இயக்குனரிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியவர். என்னுடைய சினிமா அனுபவம் என்ன தெரியுமா.? என்று நயன்தாரா பேசியதாக கூறப்படுகிறது. அதாவது நீ சொல்றது நான் கேட்கணுமா.? நான் கொடுக்கிறது தான் டைம், என்னோட லெவல் என்ன தெரியுமா.? நான் குடுக்குற டயத்துக்குள்ள நீ படம் எடுக்கணும்.
நான் வர்ற டைத்துக்கு மற்ற ஆர்டிஸ்ட்களை எல்லாம் வர சொல்லுங்க என்கின்ற தோரணையில் நயன்தாரா பதில் அளிக்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் வேறு வழி இன்றி நயன்தாராவை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை அடுத்தடுத்த நாட்கள் எடுத்து முடித்திருக்கிறார். அந்த அளவுக்கு நயன்தாராவின் அட்ராசிட்டி படப்பிடிப்பு தளத்தில் உள்ளது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்