இரட்டை குழந்தை விவகாரம்… பல கோடியை இழந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னை மகாபலிபுரம் அருகே மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு அட்லி இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் மட்டும் நயன்தாரா கலந்து கொண்டார். தன் கைவசம் இருக்கும் மற்ற படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டார்.

புதுமன தம்பதியினர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்து, ஸ்பெயின், பாரீஸ் என சுற்றி வந்தவர்கள் திருமணமான அடுத்த நான்கு மாதத்தில் வாடகை தாய் மூலம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இரட்டை குழந்தை பெற்றுள்ள நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர், இதனால் சுமார் 25 கோடி ரூபாயை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நயன்தாரா ஒரு படத்திற்கு சுமார் பத்து கோடி வரை சம்பளம் வாங்கி மிகப் பெரிய உச்சத்தில் இருக்கும் காலத்தில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.அனைத்தையும் வியாபார நோக்கத்தில் அணுகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும், தங்கள் திருமணத்தையும் வியாபார நோக்கத்தில், பிரபல நெட்பிலிக்ஸ் ஓடிடி நிருவனத்திற்கு திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்கள்.

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தின் மொத்த செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்று கொண்டது. 25 கோடி ரூபாய்க்கு நயன்தாரா திருமண நிகழ்வை விலைக்கு வாங்கிய நெட்பிலிக்ஸ் நிறுவனம், திருமண நிகழ்ச்சிக்கு அஜித், விஜய், கமல், விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் , திரிஷா, ஹன்ஷிகா, சமந்தா போன்ற முன்னனி நட்சதிரங்கள் பங்கேற்காதது அவர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

முன்னனி நட்சத்திரங்கள் பங்கேற்காததால், இந்த திருமணம் நிகச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்பதை உணர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனம், அடிமாட்டு விலைக்கு நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்வை கேட்டனர், ஆனால் 25 கோடியில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைக்க முடியாது என நயன்தாரா தரப்பில் பேச, அப்படியானால் வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருந்து வேறு எந்த ஒரு நிறுவனமும் இவர்கள் திருமண நிகழ்வை விலைக்கு வாங்க முன் வராத காரணத்தினால், மீண்டும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் குறைந்து விலைக்கு பேசி விற்பனை செய்துள்ளனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர். இந்நிலையில் விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியினர் அறிவித்தனர்.

குழந்தை பிறந்த பின்பு இனி யார், இவர்கள் திருமணத்தை பார்க்க போகிறார் என்கிற முடிவுக்கு வந்த நெட்பிலிக்ஸ் நிறுவனம், மேலும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோவின் விலையை குறைக்க தொடங்கியுள்ளது, அப்படியில்லை இல்லை என்றால் எங்களுக்கு வேண்டாம் என நெட்பிலிக்ஸ் நிறுவன தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இரட்டை குழந்தை அறிவிப்பை வெளியிட்டு தங்கள் திருமண நிகழ்ச்சியை பல கோடிக்கு விற்பனை செய்ததை இழந்துள்ளார்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் என கூறப்படுவது குறிபிடத்தக்கது.