திருப்பதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்.. திடீர் திருமணத்துக்கு என்ன கரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஏழு வருடமாக காதலித்து வருகின்றனர். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நிலையில், தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் படத்தின் மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிக்க நயன்தார கால் சீட் கொடுப்பாரா, கதை அவருக்கு பிடிக்குமா என கதை சொல்ல தயங்கி தயங்கி சென்றார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

படத்தின் கதைக்கு நயன்தாரா ஓகே சொல்லியதும், படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே நெருக்கம் அதிகமானது, இந்த நெருக்கம் பின் காதலாக மாறியது. நானும் ரவுடி தான் படத்தின் கதை சொல்வதற்கு தயங்கி தயங்கி நயந்தாராவிடம் சென்ற விக்னேஷ் சிவன், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு ஜோடியாக வலம் வர தொடங்கினர்.

ஏற்கனவே, சிம்பு, பிரபுதேவா இருவரை காதலித்து தோல்வியை சந்தித்த நயன்தாரா, இதில் இரண்டாவது காதல் தோல்வி மிக பெரிய வலியை கொடுத்தது. ஆனால் நயன்தாரா வாழ்க்கையில் விக்னேஷ் சிவன் வருகைக்கு பின்பு வலிகளை மறந்து மகிழ்ச்சியாக மாற தொடங்கினர் நயன்தாரா. மேலும் தனது காதலன் விக்னேஷ் சிவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார் நயன்தாரா, அதே போல் விக்னேஷ் சிவனும் தன்னையே நயன்தாராவுக்கு அர்பணித்ததது போன்று அவருடனே பயணித்தார்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ரகசியமாக ரெஜிஸ்டர் செய்துகொண்டனர், நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் என கூறப்படும் நிலையில். இவர்களின் திருமணம் எப்போது என்கிறது மர்மமாக இருந்து வந்தது. ஆனால் இதற்கு விடை தரும் விதத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் அதிரடி முடிவை எடுத்துள்ளனர், சமீபத்தில் காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர்.

திருப்பதி சென்ற இந்த ஜோடி, வரும் ஜூன் 9ம் தேதி இவர்களுக்கு திருமணம் என்று கூறப்படுகிறது, அதற்கான ஏற்பாடுகளுக்காக தான் இவர்கள் திருப்பதி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக தான் திருப்பதிக்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி சென்றதாக கூறப்படுகிறது.