கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா.? புதிய படப்பிடிப்பை திடீர் ரத்து செய்த நயன்தாரா.. காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

சினிமாவில் நடிகை நயன்தாரா, முன்னனி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிக் கொண்டு, தமிழ் சினிமாவில் டாப் ஒன் நடிகையாக, லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழி பட்டத்துடன் வலம் வந்தவர். ஏழு வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா.

திருமணத்திற்கு முன்பு கமிட் ஆன படங்கள் சில படங்கள் மட்டுமே நயன்தாரா கைவசம் உள்ள நிலையில், புதியதாக திருமணத்திற்கு பின்பு இதுவரை எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை. திருமணம் முடிந்த சில நாட்கள் சென்னையில் இருந்த நயன்தாரா, ஹனிமூன் கொண்டாட கணவர் விக்னேஷ் சிவன் உடன் தாய்லாந்து சென்றார்.

அங்கே தனி தீவில் கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஜாலியாக இருந்தவர், ஹனிமூன் முடித்துவிட்டு ஏற்கனவே கமிட்டாகி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக மும்பையில் நடந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதன் பின்பு கணவருடன் மீண்டும் ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா.

திருமணத்திற்கு முன்பு சில படங்களில் கமிட்டான நயன்தாரா, ஜவான் படத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்ல, ஹீரோயின் சப்ஜெக்டன அன்னபூரணி என்கின்ற படத்தில் திருமணத்திற்கு முன்பு கமிட்டாகி இருந்தார் நயன்தாரா, இந்த படத்தில் ஒரு சமையல் செய்யும் சமையல்காரியாக நடிக்க இருக்கிறார் நயன்தாரா.

திருமணம் முடிந்த உடனே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று உறுதியளித்திருந்தார் நயன்தாரா. இந்நிலையில் இம்மாதம் படம் தொடங்க இருந்த நிலையில், தற்போது அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் நயன்தாரா தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி படத்திற்காக ஒதுக்கிய பட்ஜெட் தொகையை அந்த தயாரிப்பாளர் புதியதாக சினிமா ஸ்டுடியோ திறப்பதில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது நயன்தாரா மருத்துவர் ஆலோசனைப்படி குழந்தை பெற்றுக் கொள்வதில் தீவிரமாக இருப்பதால், அட்லி படத்தில் மட்டும் மறுக்காமல் நடித்துக் கொடுத்துவிட்டு மற்ற படங்களில் நடிப்பதற்கு தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.