சென்னை : இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண விழா சென்னை மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் மொபைல் போனே எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வெகுசிலரே அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் இந்த திருமணத்தை ஆவணப்படமாக்க நயன்தாரா விரும்பினார்.
அதனால் நயன்தாரா வாழ்க்கையை இந்த திருமண நிகழ்வுடன் ஆவணப்படமாக எடுக்க இயக்குனர் கவுதம் மேனனை அணுகினர். அவரும் ஓகே சொல்ல ஆவணப்படம் தயாரானதுடன் உடனடியாக 30 கோடிக்கு ஓடிடியில் விற்பனையும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமண நிகழ்வுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அணிந்துவந்த ஆடைகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
திருமண ஆடை வடிவமைப்புக்கு ஜேட் குழுமத்தின் டிசைனர் மோனிஷாவை அணுகியுள்ளார் நயன்தாரா. மேலும் பாரம்பரியத்துடன் கூடிய நவீனத்துவதுடன் இருக்கவேண்டும் என நயன்தாரா கூறியுள்ளார். அதன்படி பழங்கால கோவில்களின் கட்டிடக்கலை நுணுக்கங்களை தழுவி திருமண ஆடைகளை வடிவமைக்க முடிவெடுத்தனர்.
கொய்சாலா கோவில் கட்டிடக்கலை நுணுக்கங்களை பற்றி டிசைனர் மோனிஷா நயன்தாராவிடம் கூற அவருக்கு அது மிகவும் பிடித்துப்போய்விட்டது. கொய்சாலாவில் உள்ள பாரம்பரியம் மிக்க புராதன கோவில்களின் கட்டிடக்கலைகள் மற்றும் அதன் சிற்பங்களே நயன்தாரா அணிந்திருந்த சிகப்புநிற ஆடையில் எம்ப்ராய்டரியாக போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை பலமணிநேர கைவினைத்திறன் மற்றும் உன்னிப்பான் வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. நயன்தாரா லெஹெங்கா புடவை அணிவதில் ஆர்வம்கொண்டவர். அதனால் புடவையின் பல்லுவில் அலையலையாய் இருப்பதுபோல டிசைன் செய்து கொடுத்துள்ளார் மோனிஷா. இந்த ஆடை மிக குறைவான எடை கொண்டது. இந்த ஆடையில் லக்ஷ்மி தெய்வத்தின் திருவுருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த புடவையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறைப்பட்டு.