விஜய் உடன் சேர்ந்து போட்ட ஐட்டம் டான்ஸ்… பாவம் செஞ்சுட்டேன்… கண் கலங்கிய மும்தாஜ்…

0
Follow on Google News

பொதுவாக இஸ்லாமியர்கள் என்றாலே, அவர்களுக்கு நிறைய கட்டுபாடுகள் இருக்கும், அதுவும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை..வெளியே போக கூடாது, புர்கா அணிய வேண்டும் என பல ரூல்ஸ்கள் இருக்கும். ஆனால் அதை எல்லாம் தகர்த்தெறிந்து, சினிமாவில் நடித்து, 90’S கிட்ஸ்களின் Favourite Heroine லிஸ்டில் இருந்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால், அப்போதிருந்தே சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தார்.

அதன்பின்பு தான், டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். ஆனால், அந்த படமும் பெரிய அளவில் வெற்றிப்பெறாத போதும், நடிகை மும்தாஜுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருந்தன. ஒரு சில படத்தில் நடித்து வந்த மும்தாஜ், பிறகு நடிகர் விஜய் நடித்த குஷி படத்தில் இரண்டாவது ஹீரோயினாகவும், மேலும் கட்டிப்புடி கட்டிப்புடி டா என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டும் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

குஷி படத்திற்கு பிறகு, பிஸியான நடிகையாக, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்த இவர், அதே சமயத்தில் பல படத்திலும் ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே திடீரொன சினிமாவில் இருந்து விலகினார். அதன் பின் விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மும்தாஜ், புர்காவில் மட்டுமே காணப்படுகிறார்.

இந்நிலையில் தான் நடிகை மும்தாஜ், தான் ஐட்டம் பாடல்களில் ஆடி தவறு செய்துவிட்டேன் என மெக்காவில் நின்று, கண்ணீர் விட்டு கதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் நடிப்பதை எல்லாம் ஓரம்கட்டி விட்டு , ஆன்மீகத்தில் குதித்த நடிகை மும்தாஜ், அண்மையில் அளித்த பேட்டியிலும், அல்லா என் வாழ்க்கையை மாற்றி விட்டார், அல்லாவைத்தவிர எனக்கு எதுவும் தேவை இல்லை என்றும் பேசி இருந்தார்.

மேலும் 44 வயதாகும் மும்தாஜ் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வரும் நிலையில், சன்னியாசி போலவும் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அப்படி தான் இவர், ஹஜ் புனித பயணம் சென்று, மெக்காவில் நின்று, கண்ணீர் மல்க கதறும் வீடியோவை வெளியிட்டு, அதில், கடந்த முறை வந்தது போலவே இந்த முறையும் நான் மெக்காவிற்கு அல்லாவின் அருளால் மீண்டும் வந்து இருக்கிறேன்,

இந்த உலகம் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அல்லாவின் பார்வையில் நான் புதிதாக பிறந்த குழந்தையைப் போல புனிதமானவளாக உணர்கிறேன், நீங்களும் மெக்காவின் இந்த அழகையும், அமைதியையும் பாருங்கள், இந்த உலகத்தை பற்றி கவலைப்படாமல் அல்லாவை நினைத்து வழிப்படுங்கள் என்றும், சினிமாவில் நான் நடிகையாக நடித்து, பார்க்கக்கூடாததை பார்த்து பாவம் செய்த என் கண்களும் மெக்காவை பார்த்துவிட்டது,

அதே போல் பலருடன் சேர்ந்து ஆடிய எனது காலும், புனிதமான இந்த காபாவில் நடந்துவிட்டது என்றும், என்னால் இதை செய்ய முடியும் போது, உங்களாலும் இதை செய்ய முடியும், நல்ல வாழ்க்கைக்காக இறைவனை வேண்டுங்கள், எதற்காகவும் யாருக்காவும் மன உறுதியை விட்டு விடாதீர்கள், அல்லா உங்களுக்கு என்றும் துணை இருப்பார் என்று பல தத்துவங்களை பேசி, எமோஷனல் ஆகி, கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அல்லாவின் ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.