நீங்கல்லாம் மனுஷங்கள் தானா… என்னை ஏன் இப்படி வேதனை படுத்துறீங்க.. நடிகை மீனா கண்ணீர்..

0
Follow on Google News

குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா, கடந்த 1982ம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசனின் “நெஞ்சங்கள்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் நடிகை மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், அர்ஜுன், சத்யராஜ் மாற்று பிரபு போன்ற முன்னணி நடிகர்கள் பலருடனும் நாயகியாக நடித்திருக்கிறார்.

என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மா என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மீனா. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இதன்பின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த மீனா, எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினி கூடவே ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு மீனா மற்றும் ரஜினி இடையேயான கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணமாக இருந்தது. ரஜினியிடம் மட்டுமில்லாமல் கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, பிரபுதேவா, சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். மேலும், மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்குக் காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததினால் இந்த நோய் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

பின் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும், மீனாவிற்கு ஆறுதலாக அவருடைய தோழிகள்தான் இருக்கின்றார்கள். கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடித்துக் கொண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியும் வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் கிசு கிசுக்களை பிரிக்கவே முடியாது. அதுவும் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் அவ்வப்போது வருவது சகஜம்தான். அந்த வகையில் நடிகை மீனா குறித்து பல்வேறு வதந்திகள் சோசியல் மீடியாவில் கிளம்பியது. அதாவது நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்ற கிசுகிசு தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகர் ஒருவரை மீனாவுடன் இணைத்து காதல் கிசுகிசுவையும் சிலர் உலவ விடுகின்றனர் ‌.

மேலும் அவரையும், அரசியல் பிரமுகர் ஒருவரையும் இணைத்து கிசுகிசு பேசப்பட்டது. இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் ஒரு நிலையான உள் போராட்டத்தை அனுபவித்துவருகிறேன். மிகவும் வலியை உணர்கிறேன். ஆனால் நீங்கள் என்னை பார்க்கும்போது நன்றாக இருப்பது போல் தோன்றும். முகமூடியின் பின்னால் மறைத்து வைத்திருக்கிறேன். வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள். முட்டாள்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்” என்றார்.

மேலும் மீனாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி இருந்தனர். பின் சிலர் இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டும் இருந்தனர். இருப்பினும் போகும் காலமாகவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் மீனா, வீடியோ மற்றும் புகைப்படங்களை தெறிக்க விடுகிறார். அதற்கு ரசிகர்களும் லைக்களை அள்ளி விடுகிறார்கள்.