தமிழ் சினிமாவில் ஆச்சி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்றவர் மனோரமா, சுமார் 5 ஆயிரம் படத்துக்கு மேலாக தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்தவர் மனோரமா. நடனம் ஆடுவது, பாடல் படுவது, என சினிமாவில் அணைத்து துறையிலும் சாதித்து காட்டியவர் மனோரமா. நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் மனோரமா கதாபாத்திரம் முக்கியதுவம் வாய்ந்ததாக இருக்கும்.
ரஜினிகாந்த் படங்கள் பல படஙக்ளில் நடித்தவர் மனோரமா. ஆனால் ரஜினிகாந்த் படங்களை விட கமல்ஹாசன் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருடன் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக, 1996 சட்டசபை தேர்தலில் கருணாநிதிக்கு ஆதரவாக செயல்பட்டார் ரஜினிகாந்த். அப்போது ரஜினிகாந்துக்கு எதிராக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டவர் தான் மனோரமா.
சசிகலா ஏற்பாட்டில், மனோரமா மகன் பூபதிக்கு மிக பெரிய பணத்தை கொடுத்து ரஜினிகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அதிமுக சார்பில் தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டார் மனோரமா. 2011 சட்டசபை தேர்தலின் போது நடிகர் விஜயகாந்துக்கு எதிராக திமுக சார்பில் வடிவேலுவை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு, மரியாதையை இல்லாமல் விஜயகாந்தை மிக கடுமையாக பேசினார் வடிவேலு, அதே போன்று தான் 1996ம் ஆண்டு ரஜினிகாந்துக்கு எதிராக மனோரமா களம் இறக்கிவிடப்பட்டார்.
பிரச்சார மேடைகளில் மனோரமா பேச்சை கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது, மனோரமா மேடையில் பேசுவதர்க்கு முன்பு, ரஜினியை திட்டு வேண்டும் என மகன் பூபதியின் தூண்டுதலின் பேரில் ரஜினிகாந்தை திட்டி தீர்த்தார் மனோரமா. இவன் கர்நாடக காரன், இவனையெல்லாம் நாம் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறோம் என்று ஒருமையில் மிக கடுமையான வார்த்தைகளால் மேடைகளில் திட்டி தீர்த்தார் மனோரமா.
1996ம் ஆண்டு தேர்தலில் மனோரமா ஆதரவு கொடுத்த அதிமுக தோல்வியை தழுவியது, ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்த திமுக ஆட்சியை பிடித்தது. 2011 தேர்தலுக்கு பின்பு எப்படி வடிவேலுக்கு சினிமாவில் மார்க்கெட் போனதோ, அதே போன்று 1996 தேர்தல் முடிவுக்கு பின் தமிழ் சினிமாவில் மனோரமாவை வைத்து படம் எடுக்க தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை. இதனால் தமிழில் மார்க்கெட் இழந்த மனோரமா தெலுங்கு சினிமா பக்கம் போனார்.
தமிழ் சினிமாவில் மனோரமா மார்க்கெட் இழக்க காரணம் ரஜினிகாந்தை கடுமையாக பேசியது தான் என்று கூறப்பட்டது. தெலுங்கு படத்தில் நடித்தாலும் சொந்த தாய் மொழி தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் வேதனையில் இருந்து வந்தார் மனோரமா. இந்நிலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம், தான் ரஜினிகாந்தை திட்டியது தவறு தான், அந்த சூழலில் பேசிவிட்டேன், மனதில் இருந்து பேசவில்லை, அவர் கர்நாடக என்றால், எம்.ஜி.ஆர் மலையாளி தானே நாங்கள் ஏற்று கொள்ள வில்லையா என்று மனோரமா பேசியுள்ளார்.
இது ரஜினிகாந்த் கவனத்துக்கு சென்ற உடன் மனோரமாவை நேரில் சந்தித்துள்ளார் ரஜினிகாந்த், அப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் மனோரமா, அதற்கு பரவாயில்லை என்று சொன்ன ரஜினிகாந்த் அவரே இயக்குனர்களிடம் பேசி மனோரமா நடிக்க வாய்ப்புகளை பெற்று தந்துள்ளார். மேலும் தன்னுடைய அருணாச்சலம் படத்தில் மனோரமா நடிக்க சிபாரிசு செய்துள்ளார் ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மனது இறங்கி மனோரமாவுக்கு உதவி செய்யவில்லை என்றால் வடிவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தான் மனோரமாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.