பணம் மோசடியில் லதா ரஜினிகாந்த்… பல பிரிவின் கீழ் பாய்ந்தது வழக்கு..

0
Follow on Google News

ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு அவருடைய குடும்பத்தினரும் மீடியாவில் பிரபலமாக தான் இருக்கிறார்கள். அதில் அவருடைய மகள்கள் இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த்தும் ஒரு விஷயத்தில் மிகவும் திறமையானவர் தான். பல்வேறு படங்களுக்கு பாடியுள்ளார். பன்முக திறமை கொண்ட இவர் வள்ளி திரைப்படத்தில் காஸ்டியூம் டிசைனராகவும் இருந்திருக்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. மிகப்பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

மேலும் இந்த படத்திற்காக கடன் பெரும் போது, போடப்பட்ட ஒப்பந்தத்தின் ஆவணங்களில் லதா ரஜினிகாந்த் உத்திரவாதம் அளித்து கையெழுத்து போட்டுள்ளதால், முரளி கடனாகப் பெற்ற தொகையை, லதா ரஜினிகாந்த் திரும்ப கொடுக்க வேண்டும் என ஆட் பீரோ நிறுவனத்தைச் சேர்ந்த, அபிர்சந்த் 2015 ஆம் ஆண்டு பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதுமட்டுமின்றி இந்த வழக்கில் முரளி, லதா ஆகியோர்மீது மோசடி செய்து ஏமாற்ற முயற்சி',ஆதாரங்களைத் திரித்தல்’, `தவறான அறிக்கை சமர்ப்பித்தல்’ ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை’ எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களைத் தாக்கல் செய்த பிரிவுகளின் கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்தது.

அதேநேரம், கர்நாடக உயர் நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு நீதிமன்ற விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், விசாரணைக்கு நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதோடு மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனது இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்த வழக்கு இன்னும் இழுப்பது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோச்சடையான் படம் தொடர்பான வழக்கு எப்போது நிறைவடையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.