ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சி குடும்ப சண்டை, காதல் தோல்வி, விவாகரத்து, உறவினர்கள் சண்டை, அடிதடி போன்ற பல பிரச்சனைகளோடு வரும் நபர்களை பேசி உட்கார வைத்து அவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்டதாக சொன்னாலும் கூட, அப்படி ஓன்று அந்த நிகழ்ச்சியில் தீர்வு ஏற்பட்டு ஒற்றுமையாக பிரச்சனை என்று வந்தவர்கள் நிகழ்ச்சி முடிந்து செல்வதை பார்க்க முடியாது.
மாறாக மேலும் பிரச்சனை பெரிதாகி, அதாவது தங்களுக்கும் இருந்த பிரச்சனையை உலகம் மக்கள் பார்வைக்கு கொண்டு சென்று, மேலும் அவர்களுக்கு அவமானத்தை பெற்று தரும் விதத்தில் தான் லட்சுமி ராமகிருஷ்னன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது என்கிற விமர்சனம் உண்டு. பெரும்பாலும் கள்ள காதல் தொடர்பான பஞ்சாயத்து தான் இந்த நிகழ்ச்சியின் ஹை லைட்..
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களில் ஒருவர் தான் லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் இவர் ‘மேடம் ஆக்சன் மேடம்’, ‘மேடம் மேடம்’ என்றெல்லாம் பேசிய வார்த்தை தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரென்ட்டிங் ஆகி வருகிறது.இதை பார்த்து பலருமே லாரன்ஸ் என்ன செய்கிறார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லாரன்ஸ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய லாரன்ஸ், முன்பு தான் பொருட்களை கொள்முதல் செய்யும் வேலை பார்த்து வந்த அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் தற்காலிகமாக வேலைப் பார்த்து வந்ததாகவும், சொந்த ஊர் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவில், சென்னையில் பாடியில் உள்ள பெண் ஒருவரை தனக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள்.
என் மனைவியின் அக்காவுடன் சகஜமாக பேசிய என்னை, நான் அவருடன் தொடர்பில் இருப்பதாக என் மனைவி குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்கள், அதனால் என் மனைவியை நான் பிரிந்து விட்டேன் என நடிகை லட்சுமி ராமகிருஷ்னன் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது, இந்த நிகழ்ச்சி மூலம் மிக பிரபலமான லாரன்ஸ் எங்கே என்கிற தேடுதல் வேட்டையை மீடியா தொடங்கியுள்ளது.
இந்நிலையில் லாரன்ஸின் உண்மையான பெயர் விருமாண்டி என தெரிய வந்துள்ளது. பிற்காலத்தில் அவர் லாரன்ஸ் என பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தான் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகும் கூட லாரன்ஸ் இங்கே வேலை செய்துள்ளார். நன்றாக சம்பாதித்து சாப்பிட்டு வந்த அவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவராக இருந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குப் பிறகு தான் லாரன்ஸை யாரும் பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்கள். உண்மையில் லாரன்ஸ் இருக்கிறாரா, இல்லையா என்பது அவரோ அல்லது குடும்பத்தினரோ சொன்னால் மட்டுமே தெரியும் என்பதால் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஒரு பதிவின் கீழ் ஒருவர் அவர் இப்போது இல்லை, எங்கள் உறவினர் தான். அவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கமன்ட் செய்துள்ளார். இதனை கண்டு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இருந்தும் லாரன்ஸ் எங்கே என பலரும் தேடியதற்கு முக்கிய காரணம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு எப்படி உங்களை அழைத்து சென்றார்கள், அதன் பின்னனி என்ன என்பதை தெரிந்து கொள்வதர்காக தான் என்றாலும் கூட தொடர்ந்து ஏழ்மையில் இருக்க கூடியவர்களை அழைத்து வந்து அவர்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக்கி TRP ரேட்டிங்காக நிகழ்ச்சி நடத்தி வரும் தொலைக்காட்சி நிறுவனமும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் ஏன் எத்தனையோ நடிகர், நடிகைகள் கள்ள காதலில் சிக்கி பிரச்சனைக்கு உள்ளாகி வருகிறார்கள், அவர்களில் ஒருவரையாவது அழைத்து லட்சுமி ராமகிருஷ்னன் பஞ்சாயத்து பண்ணலாமே என பலரும் கேள்வி எழுப்பி வருவதால், இந்த நிகழ்ச்சி மூலம் மக்களின் சாராமரியான கேள்விகளால் வசமாக சிக்கியுள்ளது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் என கூறப்படுகிறது, இந்த நிகழ்ச்சி பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.