பெத்த தந்தையே இப்படி செய்யலாமா.?தந்தையால் குஷ்பு அனுபவித்த பாலியல் கொடூரம்..

0
Follow on Google News

நடிகை குஷ்பு தன்னுடைய எட்டு வயதில் தன்னுடைய தந்தையால் தனக்கு நேர்ந்த அந்த கொடூரத்தை வெளிப்படுத்தியவர், மேலும் தன்னுடைய தந்தையால் தான் மட்டுமில்லை தன்னுடைய தாய், சகோதரர்கள் என மொத்த குடும்ப உறுப்பினர்களும் பட்ட சித்திரவதைகளை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் கண் கலங்க வைத்துள்ளது. ஒரு மனிதர் இந்த உலகில் தன்னுடைய சிறு வயதில் இருந்து படும் கொடுமைகளும், சித்திரவதைகளும் தான் பிற்காலத்தில் இந்த சமுதாயம் போற்றி மதிக்கும் ஒரு உயர்ந்த இடத்திற்கு வருவார்.

அந்த வகையில் சிறு வயதில் நடிகை குஷ்பூ தன்னுடைய சொந்த தந்தையால் ஏற்பட்ட கொடுமைகள், மற்றும் தாய், சகோதரர் இருவரையும் தந்தை படுத்தும் கொடுமைகளை பார்த்து வளர்ந்த குஷ்பு இன்று மிக பெரிய உயரத்தில் இருக்கிறார். மேலும் குஷ்பு எப்போதுமே கல கல வென்று சிரித்து பேச கூடியவர், ஆனால் அவருடைய சிரிப்புக்கு பின்னால் இப்படி ஒரு வலியும் வேதனையும் இருக்கிறதா என குஷ்புவின் சமீபத்திய பேட்டி பார்த்து கண் கலங்காதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

குஷ்பு தனக்கு சிறிய வயதில் நடந்த கொடுமை பற்றி பேசுகையில். எனது அம்மாவுக்கு அமைந்தது மிகவும் மோசமான திருமண வாழ்கை. எனது அப்பா அவருடைய மனைவியையும், குழந்தைகளையும் அடிப்பதை தன்னுடைய உரிமையாக கருதினார். இருந்தாலும் என்னுடைய தாய், அவருடைய கணவர் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார் என தெரிவித்த குஷ்பு.

மேலும் தன்னுடைய தந்தையால் எனது எட்டு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன், என தன்னுடைய சொந்த தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அடுத்தடுத்து தொடர்ந்து குஷ்பு பேசுகையில், தன்னுடைய சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் அவருடைய உரிமையாக கருதிய தன்னுடைய தந்தை .

என்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதை வெளியில் தெரிவதால் என்னுடைய அம்மாவையும், சகோதரர்களையும் அடித்து துன்புறுத்துவேன் என்று என்னை மிரட்டியதால், வெளியில் என்னால் இது குறித்து யாரிடமும் பேச முடியவில்லை. மேலும் என்னுடைய அம்மாவிடம் இதுகுறித்துக் கூறினால் அவர் அதை முதலில் நம்புவாரா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஏனென்றால் அவர் கணவனின் மேல் பற்றுக் கொண்ட ஒரு மனைவியாக இருந்தார் என தெரிவித்த குஷ்பு.

எட்டு வயதில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக என்னால் பதினைந்து வயதில்தான் குரல் கொடுக்க முடிந்தது. அதற்கான தைரியம் எனக்கு அப்போதுதான் வந்தது. ஒருகட்டடத்தில் இதற்கு மேல் தந்தையின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாது என முடிவு செய்து தந்தையை எதிர்த்து பேச துவங்கினேன்.

ஒரு சிறுமியாக என் மீது நான் கொண்ட தன்னம்பிக்கையின் காரணமாக தைரியத்தை வர வைத்து கொண்டு என்னுடைய பதினைந்து வயதில் தந்தையை எதிர்த்தேன். ஒரு பெண்ணாக வீட்டிலிருக்கும் ஒரு ஆணை எதிர்க்கும் துணிவு வந்துவிட்டால் இந்த உலகத்திலும் நம்மால் எதையும் எளிதாக எதிர்கொள்ள முடியும் என தனக்கு நடந்த துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை குஷ்பு.

ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஒரு குழந்தை தனது இளம் வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அந்த காயம் தொடரும் என குஷ்பு தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பேசியுள்ளது கண்கலங்க வைத்துள்ளது.