நடிகர் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலன் ஆண்டனியை திருமணம் செய்து கொண்ட அடுத்த சில நாட்களில் எங்கே ஹனிமூன் செல்வதையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு இந்தியில் அவர் நடித்த பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். அப்போதே கீர்த்தி சுரேஷ் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில் பேபி சன கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியானது. முதல் நாளே ரூ.11 கோடி வசூல் செய்த நிலையில், அடுத்தடுத்து வசூலில் சரிவை சந்திக்க துவங்கியது. இதுவரை சுமார் 30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், போட்ட பணத்தை கூட அட்லீ திரும்ப எடுக்க முடியாமல் தோல்வியை தழுவி உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வருண் தவான் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ₹160 கோடி பட்ஜெட்டி உருவான பேபி ஜான் படம் இதுவரை ₹23 கோடி மட்டுமே வசூலித்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. அட்லீக்கு இந்த படம் ₹100 கோடி வரை நஷ்டத்தை தந்துள்ளது. அதே நேரத்தில் பேபி ஜான் படத்தின் மாபெரும் தோல்விக்கு இதுதான் என்ற ஒரு புதிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது தமிழில் தெறி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு முக்கிய காரணமே நடிகர் விஜய்தான். அவருக்கு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருக்கும் மாஸ் தான் அந்த படத்தை ஜெயிக்க வைத்தது. தமிழில் வெளியான தெறி படம் இந்தி டப்பிங்கில் வெளியாகி யூடியூப்களில் உள்ளது. இந்த சூழலில், எதற்காக விஜய் கேரக்டரில் வருண் தவானையும், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைத்து தெறி படத்தை பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்து அட்லி தயாரிக்க வேண்டும். இந்த சிம்பிள் லாஜிக் கூட இவருக்கு தெரியலையே என ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.
முதலில் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டான படம் அஜய் தேவகன் நடிப்பில் வெளியான மைதான் படத்தில்தான். இந்தப் படத்தில் நடிக்க கமிட் ஆன பின்னர், கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைத் தாறுமாறாகக் குறைத்து, பார்ப்பதற்கே வேறு ஒருவரைப்போல் காட்சி அளித்ததால், இந்தப் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் கழட்டிவிடப்பட்டார். இதனை தொடர்ந்து பேபி ஜான் தோல்வியை தொடர்ந்து பாலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்ற பெயருக்கு ஆளாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
திருமணமான கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்துக்கு தாலியுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து பிரோமோஷன் எல்லாம் வீணாகி போனது மட்டுமில்லாமல், தற்பொழுது கணவர் வீட்டிலும் ஒரே புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த உடனே கவர்ச்சி உடையில் ஹிந்தி நடிகர் தவான் உடன் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் கீர்த்தி சுரேஷ் கணவர் வீட்டில் மிக பெரிய புகைச்சலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கீர்த்தி சுரேஷ்க்கு அவருடைய கணவர் குடும்பத்திற்கு இடையில் ஏற்பட்ட புகைச்சல் அதிகரிக்காமல் இருப்பது கீர்த்தி சுரேஷ் கையில் தான் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள்.