விஜயை கழுவி கழுவி ஊத்திய கீர்த்தி சுரேஷ் தந்தை… இதுக்கு மேல யாரும் அவமானப்படுத்த முடியாது..

0
Follow on Google News

லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் விஜய் 68 திரைப்படம் டைம் டிராவல் கதையை மயமாகக் கொண்டு எடுப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

அதற்காகத்தான் விஜய் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார். அதில் டைம் டிராவல் மூலம் காலம் கடந்து செல்லும்போது இளமையான விஜய் தோன்றுவதற்காக அதிநவீன ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.இதற்காக அமெரிக்கா சென்று ஸ்கேனிங் ப்ராசஸில் விஜய் ஈடுபட்டு சென்னை திரும்பினார். அதற்குப் பிறகுதான் அந்த படப்பிடிப்பு தொடங்கியது. மேலும் இளமையாக தோன்றும் விஜய் பாடலை முதலில் படமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு ஏற்கனவே சிம்புவை வைத்து டைம் லூப் முறையில் மாநாடு திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது இந்த நிலையில் டைம் ட்ராவலை மையமாக வைத்து தற்போது படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லியோ படத்தை கீர்த்தி சுரேஷின் தந்தையும், பிரபல தயாரிப்பாளரும் சுரேஷ் குமார் விமர்சித்து இருக்கிறார்.

அவர் பேசும் போது, “ லியோ திரைப்படத்தில் பெரிதாக ஏதும் இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. எப்படி ஒரே ஆள் 200 பேரை கிளைமாக்ஸில் அடிக்கிறார் என்று தெரியவில்லை. இவையெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் இருக்கின்றன. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் ஒன்றிணைய முடியவில்லை” என்று விமர்சித்து இருக்கிறார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக லியோ படம் பார்த்தவர்களோ, முதல் பாதியை லோகேஷ் கனகராஜும், இரண்டாம் பாதியை வேறு ஒருவரும் இயக்கியதாக விமர்சித்தார்கள். இரண்டாம் பாதி தான் படத்தின் பலகீனமாக அமைந்துவிட்டதாக கூறினார்கள். இந்நிலையில் படமே பிடிக்கவில்லை என கூறிவிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ். லியோ படம் லோகேஷ் கனகராஜின் கெரியரிலும் மிகப் பெரிய சறுக்கல் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் அப்பா லியோ படம் பற்றி பேசிய வீடியோ வைரலாகிவிட்டது. அது லோகேஷ் கனகராஜ் கண்ணில் படாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் தன் படத்தை பற்றி யார் என்ன சொன்னாலும் குதிப்பவர் லோகேஷ் கனகராஜ் இல்லை. அதனால் கீர்த்தி சுரேஷ் தந்தையின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தன் வேலையை மட்டும் பார்ப்பார் லோகேஷ் கனகராஜ் என நம்பப்படுகிறது.

ஒரு படம் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் லியோ படம் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல தயாரிப்பாளர் சுரேஷுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. எனவே, லியோவை பற்றி எப்படி அப்படி பேசலாம் என யாராலும் கேட்க முடியாது. மேலும் இது போன்ற விமர்சனங்கள் விஜய்யின் காதுகளை எட்டினால் என்னடா இது தன்னுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தந்தையே இப்படி பேசிவிட்டாரே என வருத்தம் இருக்கும்.