கீர்த்தி சுரேஷ் – திரிஷா தவிற விஜய்க்கு வேற என்ன தெரியும்… இதனால் தான் விஜய் மனைவிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது…வெளுத்து வாங்கிய முக்கிய பிரமுகர்..

0
Follow on Google News

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கவுண்டமணி கூறுவது போல தான், சினிமா, அரசியல் என்று வந்து விட்டாலே  ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சம்பந்தமே இல்லாத விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அந்த வகையில் நடிகர் விஜய் சினிமாவில் இருந்த போதும் சரி, புதிதாக கட்சி தொடங்கிய அரசியலில் நுழைந்த போதும் சரி என்ற விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது பாண்டியன் என்ற பத்திரிக்கையாளர் விஜயின் அரசியல் கட்சி தொடக்கம் குறித்து காட்டமாகவும் ஆவேசமாகவும் விமர்சித்துள்ளார். 90களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஜய். இருப்பினும் பல வருட போராட்டத்திற்கு பிறகே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதுவரை 68 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள விஜய், இப்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ என்ற 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணியில் ஈடுபடப் போவதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.

விஜயின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்திருந்தாலும், சில தரப்பினர் விஜய் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் விஜய் எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய இலக்கை நோக்கி தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் , விஜய்யை சீண்டும் விதமாக பாண்டியன் என்ற பத்திரிக்கையாளர் நக்கல் நய்யாண்டியுடன் விமர்சனம் செய்துள்ளார்.

விஜயின் அரசியல் வருகை பற்றி பத்திரிகையாளர் பாண்டியன் பேசுகையில், விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறாரே அவருக்கு முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அந்தப் பதவிக்கான தகுதியும் அரசியலுக்கான அறிவும் விஜய் இடம் கிடையாது. வெறுமனே புஸ்ஸி ஆனந்தை மட்டுமே நம்பி அரசியலில் ஜெயித்து விடலாம் என்று கட்சியை தொடங்கி இருக்கிறார் விஜய்.

அவருக்கு தமிழகத்தைப் பற்றியும் தமிழ் பற்றியும் என்ன தெரியும். அவருக்குத் தெரிந்ததெல்லாம் த்ரிஷா இல்லைனா கீர்த்தி சுரேஷ் மட்டும்தான்.” என பேசிய பாண்டியன், அரசியலைப் பற்றி சகலமும் தெரிந்தவர்களே இங்கு வந்து பின்னர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் விஜய்க்கோ அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. தொடர்ந்து அவரிடம் இரண்டு மூன்று கேள்விகள் கேட்டால் அதற்கு சரியான பதிலும் சொல்லத் தெரியாது.

இது ஒன்னும் சினிமா கிடையாது ஹீரோவாக நடித்தால் பணத்தை பார்க்கலாம் வெற்றி கிடைத்துவிடும் என்று நினைக்கிறாரோ என்னமோ.” என்று ஏளனமாக நக்கல் செய்து பேசிய பாண்டியன், ஆனால் இதைப் பற்றி முழுமையாக தெரிந்த அவரது மனைவி சங்கீதா ‘அரசியல் வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறார். இதனாலேயே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று பத்திரிகையாளர் பாண்டியன் பகிர் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம் என்பதைவிட பக்குவம் நிறைந்த விவேகம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசியலில் வெற்றியை பார்க்க முடியும். இவர் இப்போதே அரசியல் கட்சியை தொடங்கி விட்டார் ஆனால் ஒரு வருடம் ரெஸ்ட் கொடுத்து இருக்கிறார். இதிலிருந்தே அவருடைய கட்சி நிலைமை எந்த நிலையில் இருக்கிறது என்பதை பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.” என்று விஜய்யையும் அவரது கட்சியையும் இழிவாக பேசியுள்ளார்.

அதாவது எந்த நடிகை கூட நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்க தெரிந்தவருக்கு அரசியலில் நாம் தகுதி பெற்று இருக்கிறோமா என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டார். நான் உறுதியாக சொல்கிறேன் அவருக்கு அரசியலில் வருவதற்கு லாய்க்கு இல்லை என்று பத்திரிக்கையாளர் பாண்டியன் வெளிப்படையாக விஜய் பற்றியும் அவரது கட்சியை பற்றியும் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்.