தன்னுடைய 15 வருட பள்ளி காதலன் ஆண்டனியை திருமணம் முடித்துள்ள கீர்த்தி சுரேஷ் குறித்து இதற்கு முன்பு கிசுகிசுவிற்கு பஞ்சம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல கிசுகிசுகளில் சிக்கி வந்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக நடிகர் விஜய் உடன் இணைத்து வைத்து கீர்த்தி சுரேஷ் பல இடங்களில் கிசு கிசுக்கப்பட்டார். நடிகர் விஜயுடன் பைரவா சர்க்கார் ஆகிய இரண்டு படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ்.
அவர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்காத படங்கள் ரிலீஸ் ஆனால் கூட முதல் நாள் விஜய் படத்தை பார்க்க விஜய் ரசிகையாக சென்று விடுவார் கீர்த்தி சுரேஷ். மேலும் நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் தான் கீர்த்தி சுரேஷுக்கும் மேனேஜராக இருந்தார். இதனால் கீர்த்தி சுரேஸை தனது மேனேஜரின் கண் பார்வையிலேயே விஜய் வைத்துள்ளார், என்றெல்லாம் விஜய் உடன் இணைத்து கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசுகிசுக்கள் வெளியானது.
மேலும் விஜயின் நண்பர் சஞ்சயின் வீட்டில் தான் கீர்த்தி சுரேஷ் குடியிருப்பதாகவும் இதற்கு முழுக்க காரணம் விஜய் தான் தன்னுடைய நண்பர் வீட்டில் கீர்த்தி சுரேஷை குடி வைத்துள்ளார் என விஜய் நண்பர் க வீட்டில் கீர்த்தி சுரேஷ் சொகுசு கார் இருந்த வீடியோ வெளியாகி கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவர் இணைத்து பல வகையில் கிசுகிசுக்கப்பட்டது.
இதில் உச்சகட்டமாக ரகு தாத்தா என்கின்ற படத்தின் ப்ரோமோசனுக்கு கீர்த்தி சுரேஷ் வந்தபோது, விஜய் தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை ஆரம்பித்திருக்கிறார் உங்களுக்கு பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக எனக்கு விருப்பம் என்று போகிற போக்கில் கீர்த்தி சுரேஷ் சொன்னது விஜய் – கீர்த்தி சுரேஷ் இருவரையும் இணைத்து வைக்கப்பட்டு கிசுகிசு உச்சகட்டத்தை அடைந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து விஜய் – கீர்த்தி சுரேஷ் பற்றி கிசுகிசு செய்திகள் வெளியானாலும், கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி காதலரான ஆண்டனியை சுமார் 15 வருடம் காதலித்து வருகிறார், அவரைத்தான் திருமணம் செய்யப் போகிறார் என்று அரசல் புரசலாக செய்திகள் வெளியானது. அப்படி அரசல் புரசலாக வெளியான செய்தியை உறுதி படுத்தும் வகையில், தற்பொழுது கீர்த்தி சுரேஷ் அவருடைய பள்ளி காதலன் ஆண்டனி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து விஜயுடன் கீர்த்தி சுரேஷ் க இணைத்து வைத்து கிசுகிசு வெளியானாலும் கூட அவருடைய காதலன் ஆண்டனி இதுபோன்ற கிசுகிசுக்களை நம்பவில்லை என்றும், மேலும் கீர்த்தி சுரேஷ் ஆண்டனியை காதலித்துக் கொண்டிருக்கும் பொழுதே விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் எந்த அளவுக்கு விஜய்க்கு நெருக்கமாக பழகக் கூடியவரோ,
அதே அளவு கீர்த்தி சுரேஷ் தற்பொழுது திருமணம் செய்துள்ள ஆண்டனியும் விஜயுடன் மிக நெருங்கி பழகக் கூடியவர் என்றும், அந்த வகையில் தான் தற்பொழுது மணமகனுக்கு துணை மாப்பிள்ளையாக கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் மீது ஆயிரம் கிசுகிசுக்கள் வந்தாலும் கூட அவருடைய காதலின் கீர்த்தி சுரேஷ்யை முழுமையாக நம்பி தன்னுடைய காதலில் உண்மையாக இருந்ததால் தான் காதலியை கரம் பிடித்துள்ளார் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..