நடிகர் விஜய் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் கொண்டாடிய தல பொங்கல் தமிழர் பாரம்பரியத்தை கேலி கூத்தாக்கி உள்ளது என்கின்ற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது நடிகர் விஜய் தொடர்ந்து ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் அவர் என்ன செய்தாலும் இது போன்ற விமர்சனங்கள் வராது ஆனால் அவர் ஒரு கட்சிதொடங்கி ஒரு லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தலைவனாக இருக்கும்நிலையில்
குறிப்பாக விஜயை நம்பி இருக்கும் ரசிகர்களை ஏமாற்றும் விதத்தில் சமீபகாலமாக விஜயின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அரங்கேறி வருகிறது நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவாவிற்கு தனி விமானத்தில் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக சென்றார் விஜய் இது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் தல
பொங்கல் கலந்து கொண்டது அடுத்த ஒரு சர்ச்சையை வெடித்துள்ளது பொதுவாகவே தன்னுடைய பனையூர் இல்லத்தில் வொர்க் பிரம் ஹோம் என்று சொல்லக்கூடிய அளவில் தலைவர்கள் நினைவு தினங்களுக்கு புகைப்படம் வைத்து அஞ்சலி செலுத்தும் நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் செல்வது, கீர்த்தி சுரேஷ் தல பொங்கலில் கலந்து கொள்வதற்கு மட்டும் பனையூர் வீட்டை விட்டு வெளியே சிட்டாக பறந்து வந்து விடுகிறார் நடிகர் விஜய் என்கின்ற விமர்சனமும் உண்டு.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பண்டிகையாகும், ஆனால் நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் வீட்டில் நடைபெற்ற தல பொங்கலில் கலந்து கொண்டாலும் கூட, அதில் தமிழர் பாரம்பரியத்தில் கலந்து கொண்டாரா என்றால் இல்லை, ஏதோ கோவாவில் டூர் போனது போன்று ஒரு உடையை அணிந்து கொண்டு, தமிழர்களுக்கும் அந்த உடைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், பொங்கல் பண்டிகையில் விஜய் கலந்து கொண்டது விளையாட்டுத்தனமாக இருக்கிறது என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஓராண்டு இன்னும் நிறைவடையாத நிலையில், இது விஜயின் கட்சிக்கு தல பொங்கலாகும், அப்படி இருக்கையில் விஜய் அவருடைய கட்சி சார்பில் பொது இடத்தில் பொங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றாலும், வழக்கம் போல் பனையூர் இல்லத்திலேயே, இந்த வருடத்தில் புதிதாக திருமணம் செய்த தன்னுடைய கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் சேர்ந்து தல பொங்கலை கொண்டாடியிருக்கலாம்.
அப்படி கொண்டாடி இருந்தால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள்.அது விஜய்க்கும் ஒரு மரியாதையாக இருந்திருக்கும். ஆனால் ரசிகர்களுடன் தல பொங்கல் கொண்டாட கசக்கும் விஜய்க்கு, கீர்த்தி சுரேஷ் உடன் தல பொங்கல் கொண்டாடுவதற்கு மட்டும் இனிக்குதா என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டு கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்திற்கு செல்வதும், கீர்த்தி சுரேஷ் உடன் தல பொங்கல் கொண்டாடி வருவதும், ஆனால் மக்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் சென்று களத்திற்கு செல்லாமல் பனையூருக்கு வரவழைத்து பார்ப்பது, இப்படியான செயல்களை பார்க்கும் பலரும் விஜய் ஒரு விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் என்கிறார்கள்.