விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கமாக இருந்து வந்ததால் விஜய் குறித்து கிசு கிசு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இடையில் கீர்த்தி சுரேஷ்க்கு பெரிதாக எதுவும் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதத்தில், அதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோயின் சப்ஜெட் படமான ரிவால்வர் ரீட்டா படத்தை விஜய் மானேஜர் ஜெகதீஸ் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தை ஜெகதீஸ் தயாரிப்பதற்கு பின்னணியில் இருந்து பண உதவி செய்து வருவது விஜய் தான் என்று கூறப்படுகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் கதை முதல் அவருடைய கால் சீட் வரை அனைத்தையும் கவனித்து வருவது விஜய் மானேஜர் ஜெகதீஸ் தான் என்றும், அந்த வகையில் கிசு கிசுவில் சிக்கும் நடிகர்கள் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தால், அதில் நடிக்க வேண்டாம் என மறுத்து விடுகிறாராம் ஜெகதீஸ் என கூறப்பட்டது.
மேலும் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்புக்கு செல்வது மட்டுமின்றி, அவர் வீட்டில் இருந்து வெளியே செல்வது முதல் மீண்டும் வீட்டுக்கு திரும்பும் வரை விஜய் மேனஜர் ஜெகதீஸ் நேரடி கண்காணிப்பில் தான் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதில் உச்சகட்டமாக கீர்த்தி சுரேஷ் குடியிருக்கும் வீடு கூட தன்னுடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும் என விஜய் விரும்பியதாகவும்.
அதற்காக விஜய் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜயின் நண்பன் சஞ்சய் வீட்டு மாடியில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் குடியிருந்து வருவதாக செய்திகள் வெளியானது, அதை உறுதி படுத்தும் விதத்தில் கீர்த்தி சுரேஷ் வாகனம் சஞ்சய் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடியோவும் வெளியானது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் கார்டியன் போன்று விஜய் செயல்பட்டு வருவதாக கூற்பட்ட நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு ஏன் விஜய் உதவி செய்தார், குறிப்பாக விஜய் நண்பன் சஞ்சய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறியது ஏன் என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் சில தகவல் வெளியாகியுள்ளது, அதாவது கீர்த்தி சுரேஷ் அவருடைய பள்ளி தோழனை காதலித்து வந்துள்ளார்.
இது விஜய்க்கு தெரியும், தன்னுடைய காதலனை விஜய்க்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ், இப்படி இருக்கையில், கீர்த்தி சுரேஷ் காதலிப்பது வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு அவருடைய வீட்டில் பெற்றோர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததாகவும், இதனால் கடமையாக மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த கீர்த்தி சுரேசுக்கு தன்னுடைய பிரச்சனையை விஜய்யிடம் தெரிவித்து இருக்கிறார். அப்போது மிக பெரிய சப்போர்ட்டாக இருந்திருக்கிறார் விஜய்.
அதாவது கீர்த்தி சுரேஷ்க்கு பெற்றோருக்கும் இடையில் பிரச்சனை சரியாகும் வரை நண்பன் சஞ்சய் வீட்டில் சில காலம் இருக்கட்டும் என்றும், மேலும் கீர்த்தி சுரேஷுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் தன்னுடைய மேனஜர் ஜெகதீஷை கூடவே இருந்து பார்த்துக்க சொல்லி இருக்கிறார் விஜய், இதன் பின்பு கீர்த்தி சுரேஷ் உடன் அவர்களுடைய பெற்றோர் சமாதானமாகி திருமணமத்திற்கு காதல் திருமணத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள்.
அந்த வகையில் பூவே உனக்காக படத்தில் எப்படி காதல் செய்தவர்கள் பெற்றோர்களை சம்மதம் பெற வைத்து இரு வீட்டார் சம்மதத்துடன் விஜய் திருமணம் செய்து வைத்தாரோ அதே போன்று கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்துள்ளார் விஜய் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.