என் கணவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்… உண்மையை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்..

0
Follow on Google News

நடிகை கீர்த்தி சுரேஷ் நீண்ட நாளாக காதலித்து வந்த தன்னுடைய காதலனை கோவாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார், இந்த திருமணத்திற்கு நடிகர் விஜய் தனி விமானத்தில் சென்று கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய கணவர் இருவரையும் வாழ்த்தி இருந்தார். நடிகர் விஜய் பொதுவாகவே சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் சென்னையில் வெள்ளம் வந்த போது மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை, எந்த ஒரு மறைந்த தலைவர்களுக்கும் நேரில் சென்று மரியாதை செலுத்தாமல் வீட்டிலேயே புகைப்படத்தை வைத்து, ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்து வருகிறார் விஜய் என்றெல்லாம் கடும் விமர்சனம் இருந்த நிலையில்,

இதற்கெல்லாம் வராத நடிகர் விஜய், கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் சென்றார், அப்படியானால் கீர்த்தி சுரேஷ்க்கு எந்த அளவுக்கு நடிகர் விஜய் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது விஜய்யின் இந்த நடிவடிக்கை. மேலும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டது மட்டுமல்லாமல்,கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் லிலும் கீர்த்தி சுரேஷ் வீட்டில் விஜய் கலந்து கொண்டு கொண்டாடிய புகைப்படம் வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ்சுக்கும் நடிகர் விஜய்க்கும் மிக நெருங்கிய நட்பு இருந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அது நடிகர் விஜயின் நடவடிக்கை மூலம் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, அவர் காதலிக்கும் காதலனை நடிகர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக தான் ஒருவரை காதலிப்பது வெளியில் தெரிந்தால் தன்னுடைய சினிமா மார்க்கெட் சரிந்து விடும் என்பதற்காக தான், தன்னுடைய காதலை தெரியப்படுத்தாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில் தன்னுடைய கணவர் குறித்து பல்விசயங்களை பேசி உள்ளார்.

அதில் திருமண வாழ்க்கை தனக்கு பெரியதாக மாறியதாக தெரியவில்லை என தெரிவித்த கீர்த்தி சுரேஷன், நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன் என தெரிவித்தவர், தான் எங்கு சென்றாலும் புகைப்படம் மட்டும் எடுக்கிறார்கள், அதனால் நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. இது எனக்கு பழகினாலும் என் கணவருக்கு பழக்கம் இல்லை, அது அவருக்கு சங்கடத்தையே ஏற்படுகிறது என தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.

மேலும் சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் எனது கணவருக்கு இது புதுசு என்றும், அவருடைய இன்ஸ்டாவையே பிரைவேட்டாக தான் வைத்துள்ளார் என கணவர் பற்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ், மேலும் தன்னுடைய கணவர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும், அவருக்கு மீடியா அட்டென்ஷன் எல்லாம் கிடையாது, ஆனால் எனக்கு இது பழகிவிட்டது என தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.

மேலும் எங்கு சென்றாலும் போட்டோ, வீடியோ எடுக்கிறாங்க, தனக்கு இது எப்போதும் போலவே உள்ளது. ஆனால் என்னுடைய கணவருக்கு இந்த ஒரு விஷயம் தான் சங்கடத்தை கொடுக்கிறது, ஆனாலும் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இது முக்கியம் என்பதை அவர் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்கிறார் என கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவர் கூச்ச சுபாவம் உள்ளவர், அவருக்கு இந்த புகைப்படம் மீடியா இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என ஓப்பனாக போட்டுடைத்து உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here