பெற்றோர் கீர்த்தி சுரேஷ் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட விரைவில் காதலனை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் கீர்த்தி சுரேஷ் மிக தீவிரமாக இறங்கியுள்ளதாக கடந்த வருடம் தகவல் வெளியானது, கீர்த்தி சுரேஷ் கேரளாவில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, தன்னுடைய பள்ளி தோழன் ஆண்டனி என்பவரை காதலிக்க தொடங்கியுள்ளார், இவர்கள் இருவரும் தற்போது வரை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள்,
தொழிலதிபரான கீர்த்தி சுரேஷின் காதலருக்கு சொந்தமாக பல இடங்களில் ரிசார்ட் இருப்பதாகவும், மேலும் கீர்த்தி சுரேஷ் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே அவருடைய காதல் கீர்த்தி சுரேஷ் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.அதேபோன்று கீர்த்தி சுரேஷ் காதலன் வீட்டிற்கும் இவர்கள் இருவருடைய காதல் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் இருவர் காதலையும் ஏற்றுக் கொண்டவர்கள், அடிக்கடி பண்டிகை நாட்களில் இரண்டு குடும்பங்களும் ஒன்றாக சந்தித்து தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டு வந்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலரிடம் தன்னுடைய காதலனை நேரில் வரவழைத்து அறிமுகமும் செய்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில் நடிகர் விஜய் உடன் நடித்துக் கொண்டிருந்தபோது கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய காதலனை நேரில் வரவழைத்து நடிகர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதன் பின்பு ஒரு முறை கீர்த்தி சுரேஷ்ன் காதலன் பிறந்தநாள் விழாவில், நடிகர் விஜய் ரகசியமாக நேரடியாக சென்று வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் காதல் வெளியே தெரிந்தால் கீர்த்தி சுரேஷ் சினிமா மார்க்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ரகசியமாக காதலித்து வந்துள்ளார்கள். தனக்கு நெருக்கமான பல சினிமா நட்சத்திரங்களுக்கு தன்னுடைய காதலனை தனியாக அறிமுகம் செய்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் , ஆனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னுடைய காதலன் மீடியா பார்வையில் பட்டுவிடாமல் இருப்பதற்கு மிக ரகசியமாக தன்னுடைய காதலை இதுவரை வைத்து வந்துள்ளார்.
இதற்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இரவு பார்ட்டிகளில் ஒன்றாக மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியாகி சமூக வலைதளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால் கீர்த்தி சுரேஷ் – அனிருத் கலந்து கொண்ட அதே இரவு பார்ட்டியில் கீர்த்தி சுரேஷின் காதலனும் கலந்து கொண்டதாகவும்,
அந்த பாட்டி நடப்பதற்கு முன்பே கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலனை அனிருத்திடம் அறிமுகப்படுத்தி வைத்திருந்த நிலையில், அந்த பார்ட்டியில் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் – அனிருத் இருவரும் மிக நெருக்கமாக புகைப்படம் எடுக்கும் பொழுது கூட , அவருடைய காதலன் அங்கே அருகில் தான் இருந்துள்ளார். அன்று இரவு பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது அனைத்துமே கீர்த்தி சுரேஷ் காதலனின் கண் முன்னே நடந்தது என்றும் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சினிமா துறையைச் சார்ந்த சிலர், கீர்த்தி சுரேஸை காதலிப்பதாக அப்ரோச் செய்த போது, தான் ஏற்கனவே பள்ளி தோழனை காதலித்து வருவதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்து வந்துள்ள கீர்த்தி சுரேஷ் அவருடைய 15 வருட காதலனை தற்பொழுது கரம் பிடிக்க உள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.