நடிகை கங்கனா ரணாவத் சொன்ன பகீர் ….. இந்தியா என்கிற வார்த்தை அவ்வளவு மோசமா வார்த்தையா.?

0
Follow on Google News

இந்தியாவை பாரத நாடு என பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் அரசியலமைப்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இந்திய அரசியலில் பாரதம் என்கிற வார்த்தை மிக பெரிய பரபரப்பை சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது, இந்நிலையில் ஜி20 அமைப்பிற்கான மாநாட்டை இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்று நடத்துகிறது.

முதல் முறையாக இந்தியா தலைமையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் டெல்லி வருக இருப்பதால், டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி20 மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களுக்கு வரும் 9ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பாக இரவு விருந்து வழங்கப்பட இருக்கும் நிலையில் அதற்க்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, அந்த அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதியை ‘பிரசிடென்ட் ஆப் இந்தியா’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதற்கு பதிலாக ‘பிரசிடென்ட் ஆப் பாரத்’ என அதாவது பாரதத்தின் ஜனாதிபதி என அச்சிடப்பட்டு இருந்தது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவை பாரத நாடு என பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் அரசியலமைப்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரதம்’ என மாற்ற மத்திய பாஜக அரசு ஈடுபட தொடங்கியுள்ளது என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாரதம் என்கிற வார்த்தை நாடு முழுவதும் பெரும் விவாதமாக பற்றி எரியத் தொடங்கி உள்ள நிலையில் இதற்கு ஒரு தரப்பினர்கள் எதிப்பும் ஒரு தரப்பினர்கள் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டரில், ‘பாரத் மாதா கி ஜே’ என பதிவிட்டு மூவர்ண இமோஜியை பகிர்ந்துள்ளார்.

அதே போன்று கிரிக்கெட் வீரர் சேவக் பாரதம் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். எங்களின் அசல் பெயர் ‘பாரதம்’. அதை திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலமாகி விட்டது. என தெரிவித்துள்ள சேவக், மேலும் அடுத்து நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நமது அணி வீரர்கள் ‘பாரதம்’ என்ற பெயரை அச்சிட்ட ஜெர்சி அணிந்து விளையாடுவதை உறுதி செய்ய வேண்டுமென பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை கேட்டுக் கொள்கிறேன்’’ என கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் பாராதம் குறித்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் ‘இந்தியா என்ற பெயரை நேசிக்க அதில் என்ன இருக்கிறது? முதலில் பிரிட்டிஷாரால் ‘சிந்து’ என்று உச்சரிக்க முடியாததால், ‘இண்டஸ்’ என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு அது ‘இந்து’ என்றும் ‘இந்தோ’ என்றும் மாற்றம் அடைந்து இறுதியில் ‘இந்தியா’ என்று மாறியது. என தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத்,

மேலும் மகாபாரத காலத்திலிருந்தே, குருஷேத்ரா யுத்தத்தில் பங்கேற்ற அனைத்து பேரரசுகளும் பாரதம் எனும் ஒரே கண்டத்தின் கீழ் இருந்தன. எனவே, நம்மை ஏன் அவர்கள் இந்து என்றும் சிந்தும் என்றும் அழைத்தனர்? பாரத் என்ற பெயர் மிகவும் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், இந்தியா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? அவர்கள் சிவப்பு இந்தியர்கள் என்று அழைத்ததை நான் அறிவேன்.

ஏனென்றால், இந்தியன் என்றால் அடிமை என்று அர்த்தம். எனவே, தான் அவர்கள் நமக்கு இந்தியர்கள் என்று பெயரிட்டனர். அது ஆங்கிலேயர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம். பழைய அகராதிகளில் இந்தியன் என்றால் அடிமை. தற்போது தான் அதனை அவர்கள் மாற்றினர். நாம் ‘பாரதியர்கள், இந்தியர்கள் அல்ல’ என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதற்கு முன்பு இந்தியா என்பது அடிமைகளின் பெயர். அதனை ‘பாரதம்’ என்று மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கங்கனா ரணாவத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.