ஒட்டுமொத்த சிவக்குமார் குடும்பத்திற்கும் தக்க பாடம் புகட்டும் வகையில் மக்கள் பலத்த பதிலடி கொடுத்தும் இன்னும் ஜோதியாக வாய் கொழுப்பு அடங்கவில்லை என்கின்ற அளவிற்கு அவருடைய சமீபத்திலான திமிர் பேச்சு மீண்டும் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் கடந்த பத்து வருடங்களில் வெளியான 10 படங்களுமே படுதோல்வியை சந்தித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மக்கள் மத்தியில் சிவக்குமார் குடும்பத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புதான் என்றும், குறிப்பாக சூர்யா மனைவி ஜோதிகாவின் வாய்க்கொழுப்பு எடுத்த எல்லை மீறிய மேடைப்பேச்சு தான் என்கின்ற விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக மேடை ஒன்றில் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சை கூறிய வகையில் ஜோதிகா பேசிய பேச்சு கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்குமே கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
அதேபோன்று ஜோதிகா சூர்யா தயாரிப்பில் ஒடிடியில் வெளியான ஜெய் பீம் படம் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஒரு குறிப்பிட்ட தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது கடும் எதிர்ப்புக்கும் சர்ச்சைக்கு உள்ளானது. அப்போதே சூர்யாவும் ஜோதியாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் மன்னிப்பு கேட்டிருந்தால் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அந்த மக்கள் மன்னித்து விட்டிருப்பார்கள்.
ஆனால் அந்த மக்களின் கோபத்திற்கும் உணர்வுக்கும் மதிப்பளிக்க முடியாமல் திமிராக நடந்து கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கங்குவா படத்தை ஒட்டுமொத்த தமிழக மக்களுமே வெச்சி செஞ்சு வருகிறார்கள். குறிப்பாக ஒரு படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என்பதை தாண்டி இந்த கங்குவா படம் மக்களின் கோபத்திற்கு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாவதற்கு காரணம் இதற்கு முன்பு சிவக்குமார் குடும்பத்தினர் குறிப்பாக நடிகை ஜோதிகா சர்ச்சை கூறிய வகையில் பேசியாதின் வெளிப்பாடு தான்.
இந்நிலையில் கங்குவா படம் தோல்வியை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு அடுத்து இனிமேல் நாங்கள் ஒழுங்காக படம் எடுக்கிறோம் என்று சொல்வதை விட்டுவிட்டு விமர்சனம் செய்கின்றவர்களை விமர்சனம் செய்கிறார் நடிகர் ஜோதிகா. அது மட்டுமில்லாமல் கங்குவா படத்தை ஊரே காரி துப்பி வரும் நிலையில் கங்குவா படம் திரையுலகில் ஓர் அதிசயம் தன்னுடைய கணவர் சூர்யாவை நினைத்து பெருமை கொள்வதாக ஜோதிகா பேசியுள்ளார்.
அதே நேரத்தில் கங்குவா படத்தின் மீது எதிர்மறை கருத்துகள் தனக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்த ஜோதிகா, குறிப்பாக கங்குவா வெளியான முதல் நாளில் இப்படி விமர்சனம் வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றெல்லாம் விமர்சனம் செய்கின்ற மக்களையும் விமர்சனம் செய்து, தங்குவா படம் என்னமோ ஹாலிவுட் ரேஞ்சுக்கு உள்ளது என்கின்ற போர்வையில் வாய் கொழுப்பு எடுத்து ஜோதிகா பேசுவதாக சர்ச்சை ஏழுந்துள்ளது.
இந்நிலையில் மக்களின் கோபத்தை புரிந்து கொண்டு, ஜோதிகா தன்னுடைய தவறை உணர்ந்து இனிவரும் காலங்களில் மேடையில் மைக்கை பிடிக்காமல் இருக்க வேண்டும், அல்லது மைக்க பிடித்தால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச வேண்டும், இல்லை தொடர்ந்து வழக்கம் போல் வாய் கொழுப்பு எடுத்து ஜோதிகா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் இது போன்று ஒவ்வொரு முறையும் சூர்யா படம் வரும்போது மக்கள் வெச்சு செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
அந்த வகையில் நீங்கள் ஒரு குப்பை படத்தை எடுத்து விட்டு அந்தப் படத்தை தமிழக மக்கள் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தமிழக மக்கள் என்ன முட்டாளா.? நாங்கள் பணம் கொடுத்து பணம் பார்க்கின்றவர்கள், படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யத்தான் செய்வோம், விமர்சனம் செய்யும் எங்களை விமர்சனம் செய்யும் ஜோதியாகவே நாவை அடக்கு என்று படம் பார்த்த பொது மக்கள் பலரும் ஜோதிகாவை எச்சரித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.