தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நீண்டநாளாக கோலிவுட்டில் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தக் கூட்டணி இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், புதிய கீதை படத்துக்குப் பிற யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைகிறார்.
தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி படத்தின் ஹீரோயின் யார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்திற்கு வெங்கட் பிரபு, ஜோதிகாவை நடிக்க வைக்க ஆசைப்படுகிறார்.
காரணம் விஜய் ஜோதிகாவின் கலகலப்பான படம் குஷி மாதிரி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஏற்கனவே மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வேண்டியது. ஜோதிகாவுக்கு பிடித்த மாதிரி சில காட்சிகளை மாற்ற சொன்னார். ஆனால் அட்லி அதை செய்யாததால் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே படத்திலிருந்து வெளியேறினார்.
அதன் பிறகு நித்யா மேனன் ஜோதிகாவிற்கு பதிலாக நடித்தார் ஜோதிகா தற்போது இந்தியில் விகாஸ் பால் இயக்கத்தில் படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் ராஜ்குமார் ராவ் நடிக்கும் ‘ஸ்ரீ’ படத்திலும் மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவர் தளபதியின் 68 படத்தில் நடித்தார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஒரு இளம் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதாவது கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்போது தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘ஓஜி’ படத்தில் நடிக்கிறார்.
வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியாக அதே சாயத்தில் வித்தியாசமானதாக இருக்கும்.
எனவே தளபதி 68 திரைப்படம் வித்யாசமாக வெங்கட் பிரபுவின் பாணியில் உருவானால் அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. மேலும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அழகிய தமிழ் மகன், மெர்சல், பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் நான்காவது படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் நடிகர் விஜய்யின் சமூக நடவடிக்கைகள் தீவிரமடைந்து இருப்பது அவரது அரசியல் பிரவேசத்திற்கான முதல் அசைவு என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கு சமூக கருத்தை பிரதிபலிக்கும் கதையை தேடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சமூகம் சார்ந்த நல்ல கதைகளை கைவசம் வைத்துள்ள முன்னணி இயக்குனர்கள் விஜயின் கால் சீட்டை எதிர்பார்த்து உள்ளனர்.