இன்சல்ட் பண்ணாதீங்க… கண் கலங்கிய ஜோதிகா…

0
Follow on Google News

ஜோதிகா தன்னுடைய கணவர் சூர்யாவுடன் மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாக முக்கிய காரணமே தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களை குறைத்து கொண்டு இந்தி சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அதன்படி தான் ஒரு பேன் இந்தியா படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக வேண்டும் என்று ஜோதிகா ஆலோசனையை கேட்டு கங்குவா என்ற படத்தில் நடித்து பேன் இந்தியா ஸ்டார் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை, இருந்த இடத்தையும் தக்க வைக்க முடியாமல் அதால பள்ளத்தில் விழுந்துள்ளார் சூர்யா.

இந்த நிலையில் தன்னுடைய கணவரை பாலிவுட்டில் டாப் நடிகராக வேண்டும் என்று ஜோதிகா போடும் மாஸ்டர் பிளான் எல்லாமே இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட கதையாக, கைவசம் இருக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டையும் இழந்து விட்டார் நடிகர் சூர்யா. இப்படியே போனால் ஜோதிகாவே சூர்யாவின் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் தோல்வியை தொடர்ந்து வடிவேலு கதாபாத்திரத்தில் காமெடியில் வருவது போன்று டேய் ஒருத்தன் சிக்கி இருக்கான், நான் கொஞ்ச நேரம் அடிச்சிட்டு அனுப்பி விடுறேன், நீ கொஞ்ச நேரம் அடித்து அனுப்பிவிடு என்று சொல்வது போன்று நடிகர் சூர்யா மற்றும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தொடங்கி அனைவரையும் வருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லாம் அடித்து தூம்சம் செய்த சம்பத்தை யாரும் மறுக்க முடியாது.

இதில் படம் பார்த்தவர்களை விட படம் பார்க்காதவர்களின் விமர்சனம் தான் அதிகமாக இருக்கிறது. காரணம் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்கின்ற கூட்டங்கள் மொத்தமும் திரையரங்கு பக்கம் சென்று கங்குவா படத்தை பார்த்து இருந்தால், அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கும். அந்த வகையில் படம் பார்த்தவர்கள் நல்லா இல்லை என்ற விமர்சனத்தை பார்த்து படம் பார்க்காதவர்கள். அந்த படத்தில் கதை என்ன மற்றும் மற்ற விவரங்களை விமர்சனம் மூலம் அறிந்து கொண்டு விமர்சனம் செய்து வருவது தான் சூர்யாவுக்கு நடந்த சத்திய சோதனை.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் அந்த படம் வெளியாவதற்கு முன்பு சூர்யா, அவருடைய தந்தை சிவக்குமார், அவருடைய உறவினர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இவர்களெல்லாம் கொடுத்த பில்டப் தான்,அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா, 2000 கோடி அடிக்கும் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நடிகர் சூர்யா இந்த படத்தை பார்க்கின்றவர்கள் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்றால், அப்படி வாயை பிளக்குற மாதிரி எந்த காட்சியும் இல்லை. குறிப்பாக படம் மொக்கையாக இருந்தாலும் சில படம் நல்ல தூக்கம் வரும்.ஆனால் கங்குவா அதற்கும் வழி இல்லாமல் செய்து விட்டது. படத்தில் கத்தி கொண்டே இருந்தால் எங்கே வாயை பிளந்து தூங்குவது. அந்த அளவுக்கு இரைச்சல் சத்தம் படம் முழுவதும் அதிகமாக இருந்தது.

இந்நிலையி தன்னுடைய கணவர் நடித்த கங்குவா படத்தை விமர்சனம் செய்தவர்கள் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா, என் கணவரின் படங்கள் நல்ல படமாக இருந்தபோதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கங்குவா படத்தில் நிறைய நல்ல முயற்சிகள் இருந்தன. ஆனால் பிற மோசமான படங்களை விட அந்த படம் மோசமாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் என்னைக் கடுமையாக பாதித்தது என கண் கலங்கும் வகையில் பேசிய ஜோதிகா.

மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியடைந்த பல திரைப்படங்கள் தரம் குறைந்த திரைப்படங்கள் தான், அவைகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களே மிகவும் கரிசனத்துடன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவைகளை விட என் கணவர் சூர்யாவின் படம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை பார்த்தேன். இது எனக்கு அநீதியாக தெரிகிறது தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொண்டார் ஜோதிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here