காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் படத்தில் நடிகர் பிரபுதேவா ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகனார். இரண்டு படங்களில் கதாநாயகியை நடித்த காயத்ரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது, அடுத்து இரண்டு நாயகிகளுடன் அவர் ஒருவராக நடித்தார், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் சொல்லும்படி ஏதும் அவருடைய நடன புகழ் பெற வில்லை.
இப்படி சினிமா துறையில் தோல்வியை தழுவிய காயத்ரி வழக்கம் போல் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் இருப்பவர்கள் கலந்து கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பார்த்தவர்களுக்கு ஒருவர் எப்படியெல்லம் இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்தவர் காயத்ரி. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்விம்மிங் பூல், பாத்ரூம் அருகில், கிச்சன் என அணைத்து இடங்களிலும் மற்றவர்களைப் பற்றி புறணி பேசி மக்கள் வெறுப்பை பெற்றார் காயத்ரி.
சக போட்டியாளர் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்தா பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று முதன்முதலில் அபாண்டமான குற்றசாட்டை முன்வைத்த காயத்ரி. பிறகு மற்றவர்களுடன் கூட்டணி சேர்ந்து பரணிக்கு கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஸ்மோக்கிங் ஜோன் கூரை வழி ஏறி, தெறித்து ஓடினார் பரணி. காயத்ரிக்கு இருப்பது கோபம் அல்ல, ஆணவம். திமிர் என்பது வெளிப்பட்டது.
பரணி வெளியே சென்ற பின்பு காயத்ரி திமிர் ஓவியாவின் பக்கம் திரும்பியது. ஓவியா – காயத்ரி இருவருக்கும் நடந்த பிரச்சனையில் மக்கள் மீண்டும் மீண்டும் ஓவியாவுக்கு ஆதரவு அளித்தனர்.இருந்தும் காயத்ரி திருந்தவில்லை காயத்ரி. சக போட்டியாளர்கள் மத்தியில் காயத்ரி முகத்திரையை கிழிக்கும் வகையில், காயத்ரி கால்சியம் வீடியோவை போட்டு காண்பித்தார் கமல்ஹாசன்.
இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் யார் என்பதை தமிழகம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த காயத்ரி நாட்டுக்கு சேவை செய்கிறேன் என்று பாஜகவில் சில காலம் இருந்தார், அங்கேயும் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர்களுடன் முரண்பாடுகளுடன் செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம் நடவடிக்கைகள் கட்சிக்கு எதிராக இருந்து வந்ததை தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேற்ற பட்டார்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் திருமணம் செய்து விட்டாரா, அவருடைய கணவர் யார் என்கிற பல கேள்விகளுக்கு பதில் தரும் விதத்தில், அவருடைய கணவர் குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில். எனக்கு 22 வயது இருக்கும் போது, அமெரிக்க மாப்பிள்ளையான பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இது காதல் திருமணம் இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான்.
2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்துவிட்டோம். விவாகரத்துக்கு இருவரில் யாரை குற்றம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இப்போது அவருக்கு திருமணமாகிவிட்டது இந்த நேரத்தில் விவாகரத்தானது பற்றி கேட்பது சரியில்லை. சிறுவயதில் திருமணமானதால், அடிக்காடி கோவம் வரும் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.