நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்துக்கள் வழிபடும் கடவுள் குறித்த சர்ச்சை கருத்துக்களால் மிக பெரிய சர்ச்சையில் சிக்கி தற்பொழுது பரிதாபாத்தில், தப்பு செய்து விட்டோமே என சோகத்தில் மூழ்கி தத்தளித்து வரும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு புதிய படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் உள்ள செய்தி சேனல்களில் ஹாட் நியூஸாக வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை கூறிய வகையில் பேசுகையில், கடவுள் எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆண் – பெண் என்கிற வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. கோயிலுக்கு அவர்கள் வரலாம், இவர்கள் வரவேண்டாம் என எந்த கடவுளும் தெரிவிக்கவில்லை, சில சட்டங்கள் தான் இது போன்ற நடைமுறையை உருவாக்கியிருக்கிறது. சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை என தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.
மேலும், இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் நான் சொல்வேன். பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரக்கூடாது என எந்தக் கடவுளும் தெரிவிக்கவில்லை, அதை உருவாக்கியது மக்கள் தான். நான் எப்போதும் இதை நம்புவது கிடையாது என ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு , மலையாளம் என பிற மொழிகள் பாடங்களிலும் நடித்து வருவதால், தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நன்கு அறியப்பட்டவர், அந்த வகையில் கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது பிற மாநில செய்திகளிலும் இடம் பெற்றதை தொடர்ந்து அந்த மாநில மக்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே ஐய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மக்கள் கடும் போராட்டம் நடத்திய பின்பு தான் ஐயப்பன் கோவில் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்தி கொண்டனர் குறிப்பிட்ட ஒரு தரப்பினர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கடவுள் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு கேரள மக்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பி வருகிறது, குறிப்பாக கேரள பெண்கள் கடும் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதே போன்று தெலுங்கு மற்றும் இந்தி பேச கூடியவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இனி வெளியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத்தை புறக்கணிப்போம் என கண்டன குரலை ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளனர், இதனால் புதியதாக மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி கால் சீட் வாங்கி வைத்திருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்கள் படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்டுகிறது.
நேரடியாக ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்பு கொண்ட பிற மொழி தயாரிப்பாளர்கள், எங்கள் படத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்து கொள்கிறோம் என தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது போல் அமைந்துள்ளது கடவுள் குறித்த பேசிய சர்ச்சை.
இதே போன்று 2019ம் ஆண்டு நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி தெரியாது போடா என டி-ஷர்ட்டை அணிந்து போஸ் கொடுத்து தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார், ஆனால் இந்தி பேசும் மக்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியதும் அந்த புகைப்படத்தை தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது குறிப்பிட தக்கது.