பகாசூரன்… கதற விடும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அட உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமில்லையா.?

0
Follow on Google News

இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பகாசூரன். இன்றைய டிஜிட்டல் உலகில் தொலைபேசி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டாலும், அதே தொலைபேசி மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் பகாசூரன்.

ஒரு குறிப்பிட்ட கும்பல், பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி அவர்களை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி விபசார தொழிலில் ஈடுபடுத்த செய்கிறது, இதனால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் அரங்கேறுகிறது. இதற்கான மூல காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் பயன்படுத்தும் தொலைபேசியாக இருக்கிறது.

தங்கள் வீட்டுப் பெண்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்கின்ற எந்த ஒரு விவரமும் தெரியாத அப்பாவிகளாக இருக்கும் பெற்றோர்கள், பெண்களை சீரழிக்கும் கும்பலை துவம்சம் செய்யும் செல்வராகவன் மற்றும் நட்டி என ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக அமைத்துள்ள பகாசூரன் இன்றை தலைமுறை பெண்கள் கட்டாயம் பார்க்க கூடிய சமூக அக்கறை கொண்ட படமாக அமைத்துள்ளது படம் பார்த்தவர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

பொதுவாகவே இந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படம், போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இன்றையை இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக அக்கறை கொண்ட படமாக இருந்தது, இப்படி சமூக அக்கறையுடன் மோகன் ஜி தொடர்ந்து படம் எடுத்து வந்தாலும், கூட அவருடைய இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் குறிப்பிட்ட ஒரு சாதி சாயல் இருப்பதாகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை சீண்டுவது போன்று காட்சிகள் இருப்பதாக மோகன் ஜி க்கு எதிராக ஒரு குறிப்பிட்ட தரப்பு கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சாதி முத்திரை குத்தப்பட்ட இயக்குனராக மோகன் ஜி பார்க்கப்பட்டு வருவதால், அவருடைய படைப்புகளில் வெளியாகும், ருத்ரதாண்டவம், பகாசூரன் போன்ற படங்கள் நன்றாக இருந்தாலும் கூட, குறிப்பிட்ட ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள், அந்த வகையில் பகாசூரன் திரைப்படம் வெளியாகி முதல் இரண்டு நாட்கள் மக்கள் மத்தியில் பெரும் அளவில் இப்படி ஒரு படம் வெளியகியுள்ளது என்று கூட தெரியாத நிலையில் தான் இருந்தது.

ஆனால் படம் வெளியாகி பார்த்தவர்கள் தொடர்ந்து பாராட்டி வருவது, குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த நடிகர்கள் கார்த்திக், எஸ்.ஜே.சூர்யா, ஜீவா, மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, ஆகியோர் பகாசூரன் படத்தை பாராட்டி வருவது அந்த படத்திற்கு மிக பெரிய விளம்பரமாக அமைத்துள்ளது, மேலும் படம் வெளியாகி இரண்டு நாள் கழித்து தற்பொழுது பகாசூரன் ஓடும் திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளார்கள்.

இதில் பகாசூரன் படத்தை பாராட்டி மிக பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெரிவித்துள்ள பாராட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர், ஏம்மா… கோவிலுக்கு மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் உள்ளே செல்லலாம் என முற்போக்கு கருத்துக்களை இதற்கு முன்பு தெரிவித்து விட்டு, பிற்போக்கு தானமாக பெண்கள் தொலைபேசி பயன்படுத்தினால் ஆபத்து என்கிற ஒரு படத்தை பாராட்ட உனக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா.? என மிக கடுமையாக ஐஸ்வர்யா ராஜேஷை வசை பாடி வருகிறது ஒரு குறிப்பிட்ட தரப்பு.

அதே நேரத்தில் பகாசுரன் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் அந்த படத்தை பாராட்டும் சினிமா துறையை சேர்ந்த நட்சதிரங்கள் யாரும் பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜியை குறிப்பிட்டு பாராட்டவில்லை என்றாலும் கூட, பகாசூரன் படத்தை சினிமா நட்சதிரங்கள் வெகுவாக பாராட்டி வருவது, ஒரு குறிப்பிட்ட தரப்பினரை கதற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.