நான் தான் அடுத்த நயன்தாரா.. ஓவர் பில்டப் விடும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தலையை பிய்த்து கொள்ளும் தயாரிப்பாளர்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நயன்தாராவுக்கு திருமணத்துக்கு பின்பு பட வாய்ப்புகள் மிக பெரிய அளவில் குறைந்தது. திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க திட்டமிட்டிருந்த நயன்தாரா நடிப்பில் திருமணத்திற்கு பின்பு வெளியான படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதனால் ஏற்கனவே காமிட்டான படங்களில் இருந்தும் வெளியேற்றபட்டார் நயன்தாரா.

இந்த நிலையில் நயன்தாரா இடம் எனக்கு தான், நான் தான் அடுத்த நயன்தாரா என புதியதாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நயன்தாராவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி வருகிறார். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் மிக பெரிய கேவலமான தோல்வியை சந்தித்தது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா மொத்தம் ஆறு லட்சம் தான் தமிழ்நாட்டின் ஷேர் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது, அதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான த கிரேட் கிச்சன் என்கின்ற படம் தமிழ்நாட்டு ஷேர் வெறும் ஒன்பது லட்சம் தான் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் அந்த படத்திற்கு செலவு செய்த போஸ்டர் பணம் கூட தயாரிப்பாளருக்கு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய ஒரு கேவலமான தோல்வியை சந்தித்து இருந்தது, இருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை புதிதாக கமிட் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் ஒரு படத்திற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இதனால் பல தயாரிப்பாளர்கள் தலையைப் பிடித்துக் கொண்டு வேறு ஒரு நடிகையை கமிட் செய்து வருவதாக கூறப்படுகிறது.