ஜாதி, மதம், இனம், அரசியல் கடந்து தான் தமிழ் சினிமா என சினிமா துறையைச் சார்ந்தவர்கள் பல மேடைகளில் பேசி வந்தாலும் கூட, தமிழ் சினிமாவில் ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் என எல்லாம் கலந்தவை தான் சினிமா என்பது, அந்த துறையில் இருக்கும் பலரும் அறிவார்கள். அந்த வகையில் சினிமா துறையில் இரண்டு வகை சித்தாந்தம் கொண்டவர்கள் இருந்து வருகிறார்கள்.
அதில் குறிப்பிட்ட ஒரு சித்தாந்தம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்ட ஒரு தரப்பினர் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சித்தாந்தம் மற்றும் அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு எதிரான சித்தாந்தத்துடையவர்கள் அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தை முன் வைக்கும் பொழுது அவர்கள் சினிமாவில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிடும்.
மேலும் பட வாய்ப்புகள் இன்றி சினிமா விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த வகையில் தான் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துக்கு ஆதரவாகவும் மற்றொரு சித்தாந்தத்திற்கு எதிராகவும் தன்னுடைய கருத்தை பொது மேடையில் பேசியிருந்தார், அதற்கு பிறகு அவருக்கான பட வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் குறைய தொடங்கியது மட்டுமல்லாமல்,
இதற்கு முன்பு சில படங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உங்களுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை கூட எங்களுக்கு திருப்பித் தர வேண்டாம். ஆனால் இந்த படத்தில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை கூறிய வகையில் சில கருத்துக்களை முன் வைத்தார் அவர் பேசுகையில், சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை என தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம்.
இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் நான் சொல்வேன். பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரக்கூடாது என எந்தக் கடவுளும் தெரிவிக்கவில்லை, என ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் இதுபோன்ற பேசுவதற்கு பின்னணியில் காரணம் குறித்து தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஒரு குறிப்பிட்ட தரப்பு சித்தாந்தம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்ட தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தரப்பினருக்கு ஆதரவாக நடிகர்கள் பேசும் போது அவர்களுக்கு அந்த சித்தாந்தம் மற்றும் அரசியல் பின்னணி கொண்ட இயக்குனர்களால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்கின்றனர் சினிமா துறையினர்,
அதன் அடிப்படையிலேயே தமிழ் சினிமாவில் அதிக படம் நடித்திருந்தாலும், ஒரு சில படங்கள் தவிர்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பெரும்பாலான படம் சிறிய பட்ஜெட் படங்கள் தான், அதனால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்ட தரப்பினர் இயக்கம் திரைப்படங்களில் தனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக தான், இதுபோன்று பேசி தன்னை ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாளராக ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விரைவில் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் அந்த குறிப்பிட்ட சித்தாந்தம் மற்றும் அரசியல் பின்னணி கொண்ட இயக்குனர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.