அஜித் ஜோடியாக ஐஸ்வர்யா ராய்.. 50 வயது முதியவராக விஜய் நடிக்கு புதிய படம்..கதை இதுதான்..!

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில, அஜித் மற்றும் விஜய் இருவரும் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

அதேபோன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு முதலில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஆனால் நயன்தாராவுக்கு திருமணம் முடிந்து விட்டதால் அவரை மாற்ற வேண்டிய சூழலுக்கு சூழல் ஏற்பட்டது. இதனால் நடிகை திரிஷா, அஜித் நடிக்கும் புதிய படத்தில் ஜோடி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திரிஷா என்ட்ரி கொடுப்பதை விக்னேஷ் சிவன் விரும்பவில்லை, இதனால் படத்தின் கதாநாயகிகள் கிடைக்காமல், அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருந்தனர். பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் அஜித் வயதான வயதான இரண்டு குழந்தைக்கு அப்பாவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் படத்தின் கதை என்ன என்பதும் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் இந்த படத்தில் 50வயது முதியவராக நடிக்க இருக்கிறார். ஒரு ரெஸ்டாரன்ட் உரிமையாளராக நடிக்கும் நடிகர் விஜய். அந்த ரெஸ்டாரன்ட்க்கு வரும் கஸ்டமர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்வது போன்று கதைகளம்.

இதனை தொடர்ந்து தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்த்தவர்களை பழி தீர்ப்பது தான் நடிகர் விஜய் படத்தின் கிளைமாக்ஸ் கிளைமாக்ஸ் காட்சி என்கின்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி நடிக்க இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.