விஜய், ரஜினி, அஜித், கமல் இவரை பார்த்தாவது திருந்துவார்களா.? நடிகர் மகேஷ்பாபு கடவுள்யா…

0
Follow on Google News

இப்பொழுது தென்னிந்திய நடிகர்களில் சிலர் பாலிவுட் நட்சத்திரங்களின் சம்பளத்தை விட அதிகமாக பெறுகின்றனர். இதில் முதலிடத்தை பிடித்துள்ளார் விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவதாக நடிகர் அஜித் குமார் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ரூ. 163 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் வேட்டையன், தலைவர் 171 என அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடித்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 140 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

இதன்பின் ரூ. 120 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம் உலகநாயகன் கமல் ஹாசன். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார். சிவகார்த்திகேயன் ரூ. 55 கோடி, தனுஷ் ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி, கார்த்தி ரூ. 28 கோடி, சிம்பு ரூ. 25 கோடி, விஷால் – ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.இப்படி கோடியில் சம்பளம் வாங்கும் இவர்கள் இதுவரை மக்களுக்காக ஏதாவது செய்திருக்கிறார்கள் என்றால், இல்லை என்பதே கசப்பான உண்மை.

தமிழ்நாட்டில் ஏதேனும் பேரிடர், இயற்கை சீற்றம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம், ரூ. 20 லட்சம் என நிவாரணம் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஒரு போதும் உதவிகளை செய்தது இல்லை. அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளர் யார் தெரியுமா? அவர் டோலிவுட் இளவரசர் மகேஷ் பாபுதான்.

இந்திய திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் மகேஷ் பாபு 40க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையில் மகேஷ் கணிசமான அளவு செல்வத்தை குவித்துள்ளார். தனது செல்வத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை அவர் தொண்டு செயல்களுக்காக பயன்படுத்துகிறார். அதன்படி நடிகர் மகேஷ் பாபு தனது ஆண்டு வருமானத்தில் 30% நன்கொடையாக வழங்குகிறார்,

எனவே அவர் ஆண்டுக்கு ரூ.25-30 கோடி பணத்தை தொண்டு செயல்களுக்கு வழங்குகிறார். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மகேஷ் பாபு. மேலும் சில தொண்டு நிறுவனங்களை அவரே நடத்தி வருகிறார். இந்த அமைப்புகளில் ஒன்று ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார்.

இன்றுவரை இந்த முயற்சியின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அத்தியாவசிய இதய அறுவை சிகிச்சையை வழங்கியுள்ளார். இவை தவிர மகேஷ் பாபு இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார், அங்கு அவர் சாலைகள், மின்சாரம், பள்ளி மற்றும் சுகாதார வசதிகள் உட்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய வருடத்தில் 30 சதவீதத்தை மக்களுக்காக எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் உதவி செய்து வரும் மகேஷ் பாபுவை பார்த்தாவது தமிழ் சினிமா முன்னனி நடிகர்கள் திருந்துவார்களா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கோடிகளில் புரளும் தமிழ் சினிமா நடிகர்கள் பசு மாடு தருகிறேன் , தையல் மெஷின் தருகிறேன் என அவர்களின் விளம்பரத்திற்கு செய்து பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து வருவது அரங்கேறி வருவது குறிப்பிடதக்கது.