ஆயிரம் படங்களுக்கு மேல் பிண்ணனி இசை, 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தன் இசையால் உலகில் பல்வேறு இடங்களில் ஒலிக்க செய்துள்ள இசைஞானி இளையராஜாவின் கலை சேவையை பாராட்டும் விதத்தில் மத்திய அரசு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கி கெளரவ படுத்தியுள்ளது. இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது உலகம் முழுவதும் உள்ள இசைஞானி இளையராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
இளையராஜா மீது அரசியல் தொடர்பான சில விமர்சனங்கள் சமீப காலமாக இருந்து வந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு இளையராஜா தமிழகத்தின் பொக்கிஷம் என்பதை விட்டு கொடுக்காத வகையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் போன்றோர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,
அதே போன்று இளையராஜாவை ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்த அடுத்த சில மணி நேரத்தில் இயக்குனர் பாரதி ராஜா, நடிகர்கள் பார்த்திபன், கமல்ஹாசன், விஷால் மற்றும் பல நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்ற்றனர். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இசைஞானி இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில்,
ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் இளையராஜா வெளியிட்டுள்ள செய்தியில் என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர்.
மேலும், உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி என தெரிவித்துள்ளார் இளையராஜா. இப்படி உலகமே கொண்டாடும் இசைஞானி இளையராஜாவை சிறிதும் கண்டு கொள்ளாமல், ஒரு வாழ்த்து செய்தி கூட தெரிவிக்காமல் தலைக்கனத்துடன் விஜய், அஜித் இருவரும் இருந்து வருவது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தனது இசையில் உலகில் உள்ள தமிழர்களை கட்டி போட்டவர் இளையராஜா.
தனது இசையால் தமிழனை பெருமையடைய செய்துள்ள இசைஞானிக்கு கௌரவம் அளிக்கும் வகையில் அவருக்கு கிடைத்துள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வாழ்த்து சொல்வதால் அஜித், விஜய் இருவரின் தலையில் இருக்கும் கிரீடம் சரிந்து விழுந்து விடாது. தன்னை சார்ந்த துறையில் இருக்கும் பெரியவர்களை மதிக்கும் பண்பை இருவரும் கற்று கொள்ள வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.