என்ன பெரிய விஜய் , அஜித்… இந்த துணிச்சல் வருமா.? சவால் விடும் தெலுங்கு முன்னனி நடிகர்கள்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் படம் தோல்வியை தழுவினால் கூட படம் வெளியாகி மூன்றாவது நாள் சக்சஸ் பார்ட்டி என்கிற ஒரு கூத்தை அரங்கேற்றிவிட்டு அடுத்த படத்தில் மேலும் சம்பளத்தை அதிகரித்து கமிட் ஆகி விடுகிறார்கள். முன்னனி நடிகர்கள் நடிக்கும் படம் தோல்வியை தழுவினாலும் கூட, அவர்களுக்கு மேலும் பல கோடி சம்பளம் அதிகரித்து தருவதற்கு தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வரிசையில் நிற்கிறார்கள்.

இதனால் தமிழ் சினிமாவில் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் படங்கள் தோல்வி அடைந்தால் எந்த ஒரு பாதிப்பும் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு இல்லை. மேலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் கூட, மீண்டும் ஒரு படத்திற்கு உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன், படம் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது என அறிவிப்பை நஷடம் அடைந்த தயாரிப்பார்களை வெளியிட வைத்து ஏமாற்றி விடுகிறார்கள் முன்னணி நடிகர்கள்.

தெலுங்கு சினிமாக்களில் பல நடிகர்கள் சம்பளத்திற்கு பதில், அவர்கள் நடிக்கும் படத்தில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்குகளை பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் சம்பளம் மிக குறைவு, அப்படி அதிகம் சம்பளம் வேண்டும் என அங்குள்ள நடிகர்கள் கேட்டால், அதிகமா தான வேண்டும், சரி உங்களுக்கு சம்பளம் கிடையாது, லாபத்தில் இத்தனை சாதிவிதம் உங்களுக்கு பங்கு என தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள்.

தெலுங்கு மட்டுமின்றி KGF படத்தில் நடித்த கர்நாடக நடிகர் யாஷ் அவர் நடிக்கும் படத்தில் சம்பளம் வாங்காமல், லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு பெற்று கொள்கிறார். குறிப்பாக சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு என்கிற முடிவை ஒரு நடிகர் எடுப்பதற்கு, முதலில் அவர்களுக்கு தைரியம் வேண்டும், காரணம் அவர்கள் நடிக்கும் படம் வெற்றி அடைந்தால் மட்டுமே அந்த படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இவர்களுக்கு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கிடைக்கும்.

ஆனால் படம் தோல்வியை தழுவினால் அந்த நடிகர் சம்பளமே வாங்காமல் அந்தப் படத்தில் நடித்தது போன்று ஆகிவிடும். ஆனால் இப்படி ஒரு முடிவை ஒரு நடிகர் தில்லாக எடுக்கும் போது, அந்த நடிகர் தான் நடிக்கும் படத்தின் கதை தேர்வு, முதல் கொடுக்கும் கால் சீட்டுகள் வரை என அனைத்துமே மிக கவனமாக இருப்பார். இதில் தமிழ் சினிமாவில் சம்பளத்துக்கு நடிக்கும் நடிகர்கள் படத்தின் பட்ஜெட் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு என ஒப்பந்தம் போட்டு நடிக்கும் நடிகர்கள் அது தங்கள் சொந்த படமாகவே நினைத்து நடிக்கிறார்கள். இதனால் வீண் செலவுகள் தவிர்க்கப்படுகிறது. மேலும் பிற மொழி படங்களில் நடிக்கும் நடிகர்கள் அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.

குறிப்பாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR போன்ற படங்களில் நடித்த நடிகர்கள் ஒவ்வொரு மொழியிலும் சுமார் பத்து நாட்களுக்கு மேல் சென்று ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். குறிப்பாக சேட்டிலைட் சேனல் முதல் யூடுப் சேனல் வரை அனைத்து தரப்பிலும் அவர்கள் நடித்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை கலந்து கொண்டார்கள்.

தமிழ் சினிமாவில் இந்த அவலத்திற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றே கூறப்படுகிறது. ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் அவர்கள் தேவைக்கேற்ப நடிகரின் கால் சீட் கிடைத்தால் போதும் என நடிகர்கள் சம்பளத்தை அதிகரித்து ஒப்பந்தம் செய்கிறார்கள். இதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும்.

மேலும் தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளத்தை குறைத்து கொடுப்பதன் மூலம் நடிகர்களே தானாக வந்து லாபத்தில் பங்கு என தெலுங்கு சினிமா பாணிக்கு வந்து விடுவார்கள். அப்படி வந்தால் மட்டும் தான் முன்னணி தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் ஆட்டம் அடங்கும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.