இரக்கமின்றி தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் அஜித், விஜய்…. அஜித் இப்படி செய்யலாமா.? என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் அஜித் மற்றும் விஜய், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில்,முதல் இடத்தில் இருக்கும் ரஜினிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நடிகர் விஜய், மூன்றாவது இடத்தில் அஜித் உள்ளனர். இருவரும் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். விஜய் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகின்றவர்.

ஆனால் அஜித் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வேறு எந்த ஒரு விஷயத்திலும் தேவையின்றி கருத்து தெரிவிக்க மாட்டார். தனது சினிமாவில், அரசியல் சார்ந்த கதைகளில் நடிக்க மாட்டார், மேலும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவும், அல்லது எதிராகவும் சினிமாவில் அல்லது பொது இடங்களில் கருத்து தெரிவிக்க மாட்டார். இதனால், அனைவருக்கும் பொதுவானவர் நடிகர் அஜித் என்கிற கருத்தும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ நிகழ்ச்சி மற்றும் சினிமாவில் அரசியல் பேசும் நடிகர் விஜய் நேரடியாக எந்த ஒரு கருத்தையும் தைரியமாக தெரிவிக்க மாட்டார். ஆனால் அஜித் சினிமாவில் பொது பிரச்சனை குறித்து பேசாமல் நேரடியாக பேசக்கூடியவர், அந்த வகையில் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில், கருணாநிதி எதிரே மேடையில் பேசிய அஜித், இந்த பாராட்டு விழாவுக்கு நாங்கள் கட்டாய படுத்தி வரவழைக்கப் படுகிறோம் என கர்ஜித்து அந்த விழாவில் பங்கேற்ற ரஜினி எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு பாராட்டை பெற்றார்.

அதே போன்று சினிமாவில் உள்ள பெப்சி தொழிலார்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் போது. பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பெப்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அஜித்தை வைத்து இனி எந்த தயாரிப்பார்களும் படம் தயாரிக்க கூடாது என அஜித்துக்கு மிரட்டல் கூட வந்தது.

இதையெல்லாம் பொறுத்தப்படுத்தாமல், கடைசி வரை பாதிக்கப்பட்ட பெப்சி தொழிலார்களுக்கு ஆதரவாக இருந்தார் அஜித்குமார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் மற்றும் விஜய் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஆந்திராவில் உள்ள சினிமா படப்பிடிப்பு தளத்தில் செட் அமைத்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சென்னையில் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்பொழுது ஆந்திராவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

அஜித் நடிக்கும் AK 61 மற்றும் விஜய் நடிக்கும் தளபதி 66 போன்ற படங்கள் முழுக்க முழுக்க ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கே பிரமாண்டமாக செட் அமைப்பது, அங்குள்ள துணை நடிகர்களை பயன்படுத்துவது, அங்கே இருக்கும் சமையல் மாஸ்டர் மற்றும் வாகன ஓட்டுனர்கள், சினிமா படப்பிடிப்புக்கு தேவையான பொருள்களை ஆந்திராவில் வாடகைக்கு எடுப்பது என ஆந்திராவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு வருமானத்தை ஈட்டும் வகையில் விஜய் மற்றும் அஜித் படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதனால் சென்னையில் உள்ள சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படப்பிடிப்பு நடத்துவற்காக ஆந்திராவை நோக்கி படையெடுப்பதால், சென்னையில் உள்ள பெப்சி தொழிலார்கள் உட்பட பலர் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். மேலும் வருமானம் இன்றி தவித்து வரும் அவர்கள் சென்னையில் உள்ள பல ஓட்டலில் சர்வர் போன்ற கிடைத்த வேலையை செய்து வருவதாக கூறபடுகிறது.

இந்நிலையில் ஒரு காலத்தில் பெப்சி தொழிலார்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அஜித் குமார், தற்பொழுது அவர்களை வேலைவாய்ப்பின்றி தவிக்கவிட்டு ஆந்திராவில் தனது படத்தின் படப்பிடிப்பை நடத்திகொன்டு, ஆந்திராவில் உள்ள தொழிலார்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிவிட்டு, சென்னையில் உள்ள தொழிலார்கள் வயிற்றில் அடிப்பது போன்று அமைத்துள்ளது என நடிகர் அஜித்குமார் செயல்பாடுகள் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் தமிழ் ரசிகர்கள் காசு கொடுத்து பார்க்க இருக்கும் தமிழ் படங்களில் பணியாற்ற தமிழகத்தை சேர்ந்த தொழிலார்களுக்கு வாய்ப்புகளை கொடுக்காமல். ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புக்களை அமைத்து கொடுப்பது மனசாட்சிக்கு விரோதமான செயல் என்றும், நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இனிமேலாவது தமிழகத்தில் உள்ள சினிமா தொழிலார்களை காக்க வழிசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சினிமா துறையை சேர்ந்த ஊழியர்கள் புலம்பி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனை நேரில் அழைத்து அசிங்கப்படுத்திய ராஜமௌலி..! செம்ம டென்ஷனில் கமல் என்ன செய்தார் தெரியுமா.?