தெலுங்கு சினிமா நடிகரை பார்த்து கற்று கொள்வார்களா அஜித் -விஜய்.? ஒரு உயிர் போச்சே..

0
Follow on Google News

இந்த வருடம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் அஜித் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகி அஜித் மற்றும் விஜய் ரசிகர் மத்தியில் ஏற்கனவே இருந்த அந்த மோதல் மேலும் உச்சமடைய செய்துள்ளது. துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலான சமூக வலைதள மோதல்கள்.

மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் போஸ்டர் ஒட்டுவது, விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டுவது இப்படி ஆரோக்கியமற்ற ஒரு போட்டி தமிழக முழுவதும் நிலவி வந்தது. இதில் மிகப்பெரிய உச்ச கட்டமாக சென்னை ரோகினி திரையரங்குல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் நடந்த அட்ராசிட்டி எல்லை மீறி சென்றது.

நஇருவரின் படமே ஒரே நாளில் வெளியானது முதலில் துணிவு படமும், அடுத்த காட்சி வாரிசு படமும் ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித்தின் நடிப்பில் துணிவு படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் அங்கே திரையரங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களை கிழித்து நாசம் செய்தனர். அதன் பின்பு வாரிசு படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் தங்களுடைய தலைவர் விஜய் படத்தை அஜித் ரசிகர்கள் கிழித்திருந்ததை பார்த்து ஆக்ரோசமடைந்தவர்கள், அங்கே வைக்கப்பட்டு இருந்த அஜித் பேனர்களை கிழித்து நாசம் செய்தனர்.

இந்த நிலையில் அன்று துணிவு படத்தின் சிறப்பு காட்சியின் போது அங்கே சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது ஏறி நடனமாடிய அஜித் ரசிகர் ஒருவர் கீழே குதிக்கும் போது முதுகுத்தண்டில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அஜித் மற்றும் விஜய் ரசிகர் இடையில் மிகப்பெரிய உச்சகட்ட மோதலை உருவாக்குவதே அஜித் மற்றும் விஜய் தான் என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

இவர்கள் இருவரும் தெலுங்கு சினிமாவை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகையின் போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கு முன்னணி நடிகராக பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரும் படமும் வெளியானது.

இந்த நிலையில் பாலகிருஷ்ணா படத்திற்கு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்து கொள்வதும். சிரஞ்சீவி படம் பிரமோஷன் நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கலந்து கொள்வதும். இப்படி ஒரு ஆரோக்கியமான போட்டி அங்கே நிலவுகிறது. இதனால் இருவரின் ரசிகர்கள் மத்தியில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இது போன்ற ஆரோக்கியமான ஒரு போட்டியை தமிழகத்தில் விஜய் மற்றும் அஜித் போன்றவர்கள் பின்பற்றினால் அவர்கள் ரசிகர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.