இனி மீண்டும் இந்த தப்பை செய்யக்கூடாது… அஜித் – விஜய் எடுத்த அதிரடி முடிவால் சோகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்..

0
Follow on Google News

எம்ஜிஆர் – சிவாஜி அதன்பின்பு, ரஜினி- கமல் அதற்கு அடுத்து விஜய்- அஜித் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சினிமாவில் சம போட்டியாளராக இருந்து வருகின்றனர். அஜித் – விஜய் இருவரும் சினிமாவில் சம போட்டியாளராக இருந்தாலும் மிக நெருக்கமாக அடிக்கடி எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால் சிவாஜி – எம்ஜிஆர் மற்றும் ரஜினி – கமல் போன்றவர்கள் சினிமாவில் சக போட்டியாளர்களாக இருந்தாலும் கூட, தனிப்பட்ட வாழ்க்கையில் நட்பு பாராட்டி வந்தவர்கள்.

1991 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் தளபதி, கமல் நடிப்பில் குணா ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியானது. ரஜினி மற்றும் கமல் இருவரின் ரசிகர்களுக்கும் அப்போது கடும் போட்டி நிலவி வந்த காலம். மதுரையில் ஒரே திரையரங்குகளில் தளபதி மற்றும் குணா ஆகிய இரண்டு படங்களும் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் இடையில் ஏற்ப மோதல் உச்ச கட்டத்தை தொடர்ந்து அடிதடியில் முடிந்தது.

இந்த மோதலில் ரசிகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஒரு ரசிகரின் உயிர் பலியான பின்பு ரஜினி மற்றும் கமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து இனிமேல் தங்களுடைய படங்களை ஒரே தேதியில் ரிலீஸ் செய்யக் கூடாது என்கின்ற முடிவுக்கு வந்தனர். அதன் பின்பு ரஜினி மற்றும் கமல் இருவருடன் படம் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவது கிடையாது. தற்போதைய காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் சமகால போட்டி போட்டியாளர்களாக இருந்து வரும் நிலையில்,

தற்போது பொங்கல் பண்டிகைக்கு அஜித் மற்றும் விஜய் இருவருடைய படமும் ஒரே தேதியில் வெளியாகி இரண்டு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பல மோதல்களை உருவாக்கி உள்ளது. இதில் உச்சகட்டமாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே திரையரங்குகளில் வெளியானதால் இரண்டு தரப்பு ரசிகர்கள் மத்தியில் யார் பிரம்மாண்டமாக கொண்டாடுவது என்கின்ற போட்டி பெரும் உச்சத்தையும், அந்த இடத்தை ஒரு பதற்றமான ஒரு சூழலிலும் வைத்திருந்தது.

இதில் சென்னையில் அஜித் ரசிகர் ஒருவர் நள்ளிரவு முதல் ஷோ பார்க்க வந்தவர். அங்கே ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது ஆடிக்கொண்டு இருந்தபோது கீழே விழுந்து முதுகெலும்பில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார். இவர் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் நடிகர்கள் தான் என்கின்ற ஒரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1991ல் ரஜினி -கமல் ரசிகர் மோதலில் ரசிகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ரஜினி – கமல் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதே வகையில் தற்பொழுது அஜித் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது, அஜித் மற்றும் விஜய் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இனி வரும் காலங்களில் தங்களுடைய படங்களை ஒரே தேதியில் ரிலீஸ் செய்யக் கூடாது.

அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தங்களுக்கு முக்கிய கடமையும் உண்டு என்பதால், நள்ளிரவு காட்சிகள் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் பொழுது, காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதற்கு மிகப்பெரிய சிரமங்கள் ஏற்படுத்துகின்றது. மேலும் ரசிகர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல்துறை மிக பெரிய சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

அந்த வகையில் தான் துணிவு படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனபோது கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, சாலையில் சென்ற வாகனத்தில் ஏறி நடனமாடி ஒரு ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது போன்ற துயரச் சம்பவம் இனி நடக்கக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து இனி தங்களுடைய படங்களை முதல் காட்சி பகலில் தான் வெளியிட வேண்டும்.

அதிகாலையிலோ அல்லது நள்ளிரவில் வெளியிடக்கூடாது என்கின்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகள் மூலம் 3000 ரூபாய் 2000 ரூபாய் என ரசிகர்களின் உணர்வுகளை பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து சம்பாதித்து வந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அஜித் – விஜய் இந்த முடிவு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.