தற்போது தமிழில் எந்த படம் வந்தாலும் அதில் காமெடியனாக யோகி பாபு கட்டாயமாக இருப்பார் என்ற நிலை வந்துள்ளது. அந்த அளவிற்கு காமெடியில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். அது மட்டும் இன்றி முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் இணைந்து தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய டைமிங் காமெடி மற்றும் பாடி லேங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு,
நிற்கக்கூட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள ரஜினியின் ஜெயிலர் படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. பாலிவுட்டிலும் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளார் யோகிபாபு. இவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது. முருகன் மீது தீவிர பக்தியுடைய யோகிபாபு அடிக்கடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருபவர்.
அந்த வகையில் கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். அது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவருடன் பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அப்போது அர்ச்சகர் ஒருவரிடம் யோகி பாபு சென்று கை கொடுக்கிறார். ஆனால் அந்த அர்ச்சகர் கை கொடுக்க மறுத்து ஆசீர்வதிப்பது போல் கையை காண்பிக்கிறார்.
உடனடியாக யோகி பாபு, அவரைக் கிண்டல் செய்வது போல் சமாளிக்கிறார். இந்த வீடியோவிற்கு கீழ், பலரும் தீண்டாமைக் கொடுமை என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பலர் அந்த அர்ச்சகருக்கு எதிராக தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கோவிலில் யோகிபாபுவுக்கு தீண்டாமை நடந்துள்ளது என மிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் அதில் பேசிய யோகி பாபு,
கோயில் குருக்களால் தனக்கு எந்த ஒரு தீண்டாமையும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி கோவிலுக்கு நான் அடிக்கடி போவதுண்டு. அங்குள்ள முருகன் அருளால் தான் நான் அனைத்து காரியங்களும் தொடங்குவது உண்டு. அவ்வாறு நான் பைக் வாங்கிய காலத்துல இருந்து 12 ஆண்டுகளாகவே கோவிலுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறேன்.
மேலும் அக்கோவில் குருக்களை எனக்கு நன்றாக தெரியும் அவர் ஒரு நல்ல மனிதர். அதை தொடர்ந்து குருக்கள் அணிந்திருந்த முருகன் டாலரை பார்த்த நான் எங்கு வாங்கினீர்கள் என கேட்டேன். அதற்கு ஃபாரினில் இருந்து வந்தது பா என அவர் சொன்னார். இந்த உரையாடல் நிகழ்ந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அவை. அதை வேண்டுமென்றே யாரோ இப்படி போட்டு பரப்பி கொண்டிருக்கின்றார்கள்.
அதுவும் இது நடந்து ஒன்றரை மாதம் ஆகி இருக்கும். என்னிடம் ஆன்மீகம் சம்பந்தமாக பல விஷயங்களை குருக்கள் பகிர்ந்ததுண்டு. அதேபோல தான் அவரிடம் டாலரைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கும் போது அவற்றை தீண்டாமை காரணமாக குருக்கள் யோகி பாபுவிற்கு கைகொடுக்கவில்லை எனவும் கூறி வருகின்றனர். கோவிலுக்கு வந்து சாதி எல்லாம் பார்க்க வேண்டாம். கோவில் குருகளால் எந்த தீண்டாமையும் எனக்கு நடக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.