தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குனராக இருந்து வந்த யோகிபாபு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இயங்குனர் அமீர் இயக்கத்தில் யோகி படத்தில் மூலம் சினிமாவுக்கு காமெடி நடிகனாக அறிமுகமான பின்பு தனது பாபு என்கிற பெயரை யோகி பாபு என்று மாற்றி கொண்டார், சினிமாவில் அறிமுகமாகி அடுத்த 5 வருடத்தில் பிசி காமெடி நடிகராக வலம் வர தொடங்கினார் யோகி பாபு.
தற்பொழுது வருடத்துக்கு சுமார் 30 படங்கள் வரை நடிக்கும் யோகி பாபு ஒரு நாள் கால்சீட்டுக்கு சம்பளம் ரூபாய் 7 லட்சம் வரை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது கைவசம் 30 க்கு மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், அந்த அளவுக்கு பிசியாக இருந்து வரும் யோகிபாபு இதற்கு முன்பு வடிவேலு உச்சத்தில் இருந்த போது ஆணவத்தில் நடந்து கொண்டது போன்று நடந்து கொள்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
வடிவேலு ஆணவத்தினால் சினிமாவில் காணாமல் சென்று விட்டார், நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் காமெடி படங்களில் நடிக்க கால் சீட் கொடுக்க முடியவில்லை, இப்படி ஒரு சூழலை தக்க வைத்து கொண்ட யோகிபாபு வுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் யோகி பாபு உடனே நடிக்க ஸ்பாட்டுக்கு வருவதில்லை. ரிகர்சல் பார்ப்பதாக நேரத்தை கடத்துவது.
இயக்குனரிடம் ஸ்கிரிப்ட் ல் திருத்தம் செய்ய வலியுறுத்துவது. இப்படி நேரத்தை கடத்திவிட்டு, மதியம் 12 மணிக்கு தான் காமெரா முன்பு யோகி பாபு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு நாள் கால்சீட் சம்பளம் வாங்கும் யோகிபாபு அரை நாள் தான் நடித்து கொடுத்துவிட்டு போவதாக கூறப்படுகிறது. இது அந்தந்த படத்தின் தயாரிப்பாளருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இருந்தும் யோகி பாபுவுக்கு மார்க்கெட் இருப்பதால் பொறுமை காத்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
முன்னனி நடிகர்கள் மற்றும் முன்னனி இயக்குனர்கள் படங்களில் சத்தமே இல்லாமல் அடக்கமாக நடித்து கொடுத்துவிட்டு போகும் யோகி பாபு, மற்ற படங்களின் படப்பிடிப்பில் இவருடைய அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்கின்றனர் சினிமா துறையினர், இருந்தும் சினிமாவில் ஆணவத்தில் ஆடினால் வடிவேலு போன்று காணாமல் சென்று விடுவார் யோகி பாபு என எச்சரிக்கின்றனர் சினிமா துறையினர்.