தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் வருகின்றவர்கள் தாக்குப் பிடித்து வெற்றி பெறுவது மிகப்பெரிய கடினம் என்பதற்கு உதாரணமாக தற்பொழுது விளங்கி வருகின்றவர்கள் நடிகர் யோகி பாபு. காரணம் யோகி பாபு எந்த ஒரு சினிமா பின்பலவும் இல்லாமல் சுமார் 24 வருடங்களாக போராடி இன்று ஒரு பிசி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கையில், அவருடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல்,
சினிமா துறையை விட்டு அவரை வெளி வெளியேற்ற வேண்டும் என்கின்ற வன்மம் சமீபத்தில் வலைப்பேச்சு சேனலில் அமர்ந்து கொண்டு பேசிய பிஸ்மி அந்தணன் இருவருடைய பேச்சின் மூலம் வெளிப்பட்டது. பொதுவாக யோகி பாபுவை மக்கள் ஒரு நடிகராக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அதனால் தான் இன்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருக்கு ஒரு நாளைக்கு 25 லட்ச ரூபாய் சம்பளம் விதம் பேசி படத்தில் ஒப்பந்தம் செய்கிறார்கள்.
இப்படி நேரமில்லாமல் கமிட்டாகி பிஸி நடிகராக வலம் வரும் யோகி பாபுவை ஒரு காமெடியனே கிடையாது அவரை நாங்கள் காமெடியன் என்று சொல்ல மாட்டோம் என்று வலைப்பேச்சில் அமர்ந்து கொண்டு அந்தணன் பிஸ்மி இருவரும் குறிப்பிட்டு ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதாவது யோகி பாபு சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இவர் ஒரு காமெடி நடிகனே இல்லை என்று தான் நாங்கள் சொல்லி வருகிறோம் என்றால் என பதிவு செய்து வருகிறார்கள்.
அப்படி இவர்கள் யோகிபாபுவுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து பதிவு செய்து வந்தாலும் மக்கள் அதை புறந்தள்ளிவிட்டு தான் யோகி பாபுவை ஏற்றுக்கொண்டு இன்று ஒரு பிசி நடிகராக வைத்திருக்கிறார்கள் என்றால், யோகிபாவுக்கு எதிராக சினிமாவில் கட்டம் கட்ட நினைத்த வலைப்பேச்சு போன்றவர்களை கடந்து தான் யோகி பாபு இன்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் என்னடா நம்ம என்ன சொன்னாலும் யோகி பாபு வின் சினிமா மார்க்கெட் கீழே விழமாட்டேன்கிறது என குழம்பி போய் இருக்கும் வலைப்பேச்சு குழுவினர் கையில் எடுத்து ஆயுதம் தான் அஜித்துக்கு எதிராக யோகி பாபுவை திருப்பி விடுகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தொடர்ந்து ஆரம்ப கட்டத்திலிருந்து யோகி பாபு மீது வன்மத்தை கக்கி வரும் இந்த குழுவினர் தற்பொழுது அஜித்தை யோகி பாபு தொடும் போது டோன்ட் டச் என்று அவமரியாதை செய்துவிட்டார் என்று யோகிபாபு வே எங்களிடம் வந்து சொன்னார் என்று சொல்வதெல்லாம் அஜித்துக்கு எதிராக யோகி பாபுவை திருப்பிவிட்டு , அஜித் ரசிகர்கள் மத்தியிலேயே யோகி பாபு மீது ஒரு எதிர்ப்பை கொண்டு வந்து அவரை சினிமாவில் காலி செய்து விட வேண்டும் என்கின்ற நோக்கம் தான் என்று யோகி பாபு ரசிகர்களும் பொதுவான சினிமா ரசிகர்களுமே கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் யோகி பாபு இதற்கு முன்பு அஜித்தை புகழ்ந்துதான் பேசியிருக்கிறார் தவிற இகழ்ந்து ஒரு முறை கூட பேசியதில்லை. அப்படி இருக்கும் பொழுது ஆதாரம் இல்லாமல் எப்படி இது போன்ற குற்றச்சாட்டை வலைப்பேச்சுவினர் வைக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது