பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் மாரடைப்பால் உயிரிழப்பு இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விவேக் 1961 நவம்பர் 19ஆம் தேதி அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி. நடிகர் விவேக்கின் தந்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.
இவர் 1887ல் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராகவும் சமூக ஆர்வலர்கள உள்ளார். இவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய வரும் கூட. முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. APJ அப்துல்கலாம் அவர்களை தனது முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட விவேக், அவருடைய கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு தொடங்கி 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இவரது இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார்.
அனைத்து பிரபலங்களுடன் நடத்த ஒரு நகைச்சுவை கலைஞர். நகைச்சுவையின் பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் நகைச்சுவையுடன் கலந்து வெளிப்படுத்தியுள்ளார் என்பதால் இவரை பலர் நகைச்சுவை கலைஞர் என்று அழைத்தனர். நடிகர் விவேக் அருள் செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமிர்த நந்தினி, தேஜஸ்வனி என்ற இரு மகள்கள் உள்ளனர். நடிகர் விவேக்குக்கு பிரசன்னா என்ற மகனும் இருந்தார் டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சல் 2015ஆண்டு இறந்துவிட்டார்.
சமீபத்தில் கொஒரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்தார் விவேக். நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் இன்று காலை இயற்கை எய்தினார். இவரது இழப்பு சினிமாத் துறையையும் தமிழகத்தின் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.