விஷால் நடித்த மதகஜராஜா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வந்த பொது, தடுமாறி கீழே இரண்டு இடங்களில் விழுவது போன்று சென்றது பார்ப்பவர்களை பதற வைத்தது. தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் மேடை ஏறிய விஷால் கை நடுக்கம், வாய் உளறல் என அவரால் நின்று கூட பேச முடியாமல், தடுமாறி கொண்டிருந்தது என்னாச்சு விஷாலுக்கு என்கிற குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் விஷால் இந்த நிலைக்கு காரணம், அவருடைய நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் தான் என்றும், விஷாலுக்கு கூடவே இருந்து குழிபறித்து விட்டு பள்ளத்தில் தள்ளிவிட்டு அவர்கள் எஸ்கேப் ஆகி விட்டார்கள் என விமர்சனம் எழுந்துள்ளது இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். நடிகர் விஷாலை வைத்து இதற்கு முன்பு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பின்பு தான் அவர்கள் அந்த படத்தை திரைக்கு கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அப்படி விஷாலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் படும் சிரமங்களுக்கு முக்கிய காரணம், வேறு யாரும் கிடையாது நடிகர் விஷால் மட்டுமே. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை நடிகர் விஷாலின் நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகிய இருவரும் தயாரித்திருந்தார்கள்,
மற்ற தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய சேட்டையை காண்பிப்பது போன்று நண்பர்களிடமும் காண்பித்துள்ளார் நடிகர் விஷால். பல நேரங்களில் விஷால் படப்பிடிப்புக்கு வராமல் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது, அப்படி ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பு ரத்து செய்யும் பொழுது, ஒவ்வொரு தடவையும் சுமார் பத்து லட்சம் வரை வீண் செலவாக வீணடிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர்களான நந்தா மற்றும் ரமணா இருவரும் நடிகர் விஷாலிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்கள். அதற்கு விஷால் ஒவ்வொரு தடவையும் என்னால் படப்பிடிப்புக்கு வராததால் ரத்தாகும் படப்பிடிப்பு செலவை என்னுடைய சம்பளத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் விஷாலுக்கு லத்தி படத்தில் 14 கோடி சம்பளம் பேசப்பட்டு இறுதியில் அவர் படப்பிடிப்புக்கு வராததால் பலமுறை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் ஒவ்வொரு முறையும் தலா 10 லட்சம் விதம் கழிக்கப்பட்டு, சுமார் 6:30 கோடி விஷாலின் சம்பளத்தில் கழித்து மீத பணத்தை விசாலிடம் கொடுத்துள்ளார்கள் அப்படத்தின் தயாரிப்பாளர்களான ரமணா மற்றும் நந்தா இருவரும்.
இந்த நிலையில் நண்பர்களே நீங்களே என்னிடம் இப்படி கணக்கு பார்ப்பதா என்று விஷால் கோபப்பட, உன்னால் நாங்க பட்ட நஷ்டம் போதாதா.? இத்துடன் உன்னுடைய நட்பை நாங்கள் முறித்துக் கொள்கிறோம், என்று நட்பு வட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்கள் ரமணா மற்றும் நந்தா ஆகிய இருவரும் என கூறப்படுகிறது. ஆனால் ரமணா மற்றும் நந்தா இருவரும் தான் விஷாலின் நல்ல நல்ல நண்பர்கள் எல்லாம் விஷாலை விட்டு பிரிய காரணமாக இருந்துள்ளார்கள், கடைசியில் அவர்களும் விஷாலை நடு ஆற்றில் விட்டுவிட்டு சென்ற பின்பு கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி விஷாலுக்கு உடல் நிலை பாதிப்படைய காரணம் என கூறப்படுகிறது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.