நடிகர் விஷால் சமீபத்தில் நடந்த மதகஜ ராஜா படத்தி்ன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது உடல் நிலை படு மோசமாக இருந்ததை பார்க்க முடித்தது, இதற்கு என்ன காரணம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் விஷால் நடிக்க தொடங்கியதுமே விஷாலுக்கு ஏழரை சனி தொடங்கி விட்டது என்கிறது சினிமா வட்டாரங்கள்.
அவன் இவன் படத்தில் மார்கன் போன்று நடிக்க தெரிந்தால் நடிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அதை விட்டு விட வேண்டும், நடிகர் கமல்ஹாசன் பல வேடங்களை முயற்சி செய்திருக்கிறார், அவ்வை சண்முகியில் பெண் வேடம், அபூர்வ சகோதரர்களில் குள்ளனாக நடித்திருப்பார், இப்படி நிறைய விஷயங்கள் செய்த கமல்ஹாசன் கூட, அந்த அந்த கேரக்டராவே நடிப்பாரே தவிர, அந்த கேரக்டராகவே மாற வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட மாட்டார் கமலஹாசன்.
ஆனால் அவன் இவன் படத்தில் நடிகர் விஷால் மார் கண் போன்ற நடிக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய கண் இழுத்து வைத்து தைக்கப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது, இதற்காகவே விஷாலுக்கு ஆபரேஷனே நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் விஷால் மார்கன் போன்று அருமையாக நடித்திருக்கிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது உண்மை இல்லை, மார்கன் போன்று இருப்பதற்காக அவருடைய கண் அறுவை சிகிச்சை மூலம் இழுத்து தைக்கப்பட்டது என்று ஒரு அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது . மேலும் மார்கன் போன்று விஷால் நடிக்கும் காட்சிகள் படமாக்க வேண்டுமென்றால் ஒரு 20 நாட்களில் எடுத்து அவரை அனுப்பி விட்டிருக்கலாம். ஆனால் பாலா இரண்டு வருடங்கள் விசாலை பாடா படுத்தி விட்டார் பாலா என்றே கூறப்படுகிறது.
அதாவது விஷாலுக்கு இழுத்து தைக்கப்பட்ட கண் அந்த தையலை பிரித்து விட்டால் மீண்டும் இழுத்து தைப்பதற்கு சிரமம் என்பதால், சுமார் இரண்டு வருடம் விஷால் மார்கன் போன்று இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது படப்பிடிப்பு தளம் மட்டுமல்லாமல் வீட்டில் மற்றும் வெளியே எங்கே சென்றாலும் மார்கன் போன்று சுற்றி வந்துள்ளார் விஷால்.
இதனால் அவன் இவன் படத்தில் நடித்த விஷாலுக்கு அந்த படத்தினால் மிகப்பெரிய ஆபத்து தற்பொழுது விளைவித்து விட்டது. அதே நேரத்தில் இரண்டு வருடங்கள் கழித்து விசாலின் கண் தையல் எல்லாம் பிரித்த பின்பு, அவருடைய கண் இயல்பான பார்வைக்கு வருவதற்கே மிகவும் கடினமாய் இருந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்று விஷாலின் கண் இழுத்து வைத்து தைக்கப்பட்டதால் அவருக்கு மிகப்பெரிய தலைவலி அடிக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அதாவது சாதாரண தலைவலி இல்லை, மிக கொடூரமான தலை வலி என்றே சொல்லலாம். இதனால் அதிக மாத்திரையை உட்கொள்ள வேண்டிய சூழல் விஷாலுக்கு ஏற்பட்டது. இதனால் நாளடைவில் அவருக்கு நியூரோ ப்ராப்ளம் வந்துள்ளதாக தகவல் கூறுகிறது.
நடிகர் விஷால் இது குறித்து வெளிநாடுகளில் எல்லாம் சிகிச்சை பெற்றாலும் கூட இப்படி பல முயற்சிகள் செய்து அனைத்தும் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷாலின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்து விட்டது விஷால் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தது. அந்த வகையில் விஷாலின் தற்போதை உடல்நிலை பிரச்சனைக்கு பாலா தான் காரணம் என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.