பல கோடி ஏப்பம் போட்டு நீதிமன்றத்துக்கே விபூதி அடிக்கும் விஷால்… பரிதாபத்தில் பணத்தை இழந்தவர்கள்..

0
Follow on Google News

இந்நிலையில் மருது படத்தின் போது சினிமா பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தார் விஷால். ஆனால் மருது படம் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றிருந்தாலும் அன்புச்செலியனிடம் வாங்கிய பணத்தை விஷால் திரும்ப கொடுக்கவில்லை. அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை இழுத்தடிப்பு செய்து கொண்டே இருந்தார் விஷால்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அன்பு செழியன் விஷாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்த தொடங்கினார். இதனை தொடர்ந்து விஷால் நெருக்கடியான சுழலில் இருப்பதை அறிந்த பிரபல லைக்கா நிறுவனம் விஷாலுக்கு உதவுவதற்கு முன் வந்தது. அன்புச்செழியனிடம் விஷால் வாங்கிய 21 கோடி ரூபாய் பணத்தை லைக்கா நிறுவனம் திருப்பி கொடுத்து, விஷாலுடன் தொழில் ரீதியாக சில ஒப்பந்தம் செய்தது லைக்கா நிறுவனம்.

ஆனால் லைக்கா நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை விஷால். இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஷாலை கடுமையாக கண்டித்து லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய கோடி கடனை திருப்பி செலுத்த அறிவுறுத்து உள்ளார்.

ஆனால் விஷால் தரப்பில் தனக்கு நிறைய கடன்கள் இருப்பதால் போதிய வருமானம் இல்லாமல் பிறரிடம் வாங்கிய கடனவே தன்னால் கட்ட முடியவில்லை. அதனால் லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய கடனை அடைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என விஷால் தரப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் நடிகர் விஷால் ரூ.15 கோடியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீட்டு தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் விஷால் சொத்துப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் விஷால் ரூ.15 கோடியை செலுத்த வேண்டும் என்கிற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். அதனை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி அமர்வில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை தியேட்டரிலோ அல்லது ஓடிடியிலோ வெளியிட தடைவிதித்து மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஆனால் வீரமே வாகை சூடும் படத்திற்குப் பிறகு விஷால் அவரது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலம் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.அதற்கு அடுத்து அவர் நடித்து வெளிவந்த லத்தி படத்தை அவரது நண்பர்களான நடிகர்கள் நந்தா ரமணா ஆகியோர்தான் தயாரித்தனர், தற்பொழுது அவர் நடித்துவரும் மார்க் ஆண்டனி படமும் வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படம் தான்.

இந்த நிலையில் தற்பொழுது நீதிமன்ற தீர்ப்பினால் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் அடுத்தடுத்து எந்த ஒரு படங்களும் தயாரிப்பதற்காக வாய்ப்பு இல்லை என்றும், மேலும் இது போன்ற தீர்ப்பு வரும் என்று முன்பே அறிந்து தான் விஷால் படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கும் எண்ணம் துளியும் இல்லை விஷாலுக்கு என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

அப்படி அவருக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எண்ணம் இருந்திருந்தால் இப்படி பல்வேறு தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டு இருக்க மாட்டார், அதே நேரத்தில் தற்பொழுது விஷால் மீது உள்ள நாணயம் நம்பிக்கைகள் சினிமா வட்டாரத்தில் இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் லைக்கா நிறுவனத்துக்கும் நீதிமன்றத்துக்கு சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தனக்கு சாதகமாக்கி கொண்டு விபூதி அடித்து வருகிறார் விஷால் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..