கடன் தொல்லை .. சமாளிக்க முடியமால் விஜயிடம் கையேந்தும் விஷால்… விஜய் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஷால் மற்றும் அவர் தந்தை உட்பட குடும்பத்துடன் அனைவரும் பெரும் கடன் சிக்கலில் தத்தளித்து வருகின்றனர். விஷால் சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்தார். பிரபல சினிமா பைனான்ஸ் அன்புச்செழியனிடன் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், இழுத்தடித்து வந்த விஷால், ஒவ்வொரு தடவையும் டிமிக்கி கொடுத்து வந்தார்.

ஆனால் நீ, நடிகர் சங்கம் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கம் தலைவர் என எந்த பொறுப்பில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, மற்றவர்களிடம் விளையாடுவது போல் என்னிடம் விளையாட வேண்டாம் என்று அன்புச் செழியன், அவர் பாணியில் விசாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். அன்புசெழியனிடன் தப்பிக்க முடியாமல் தத்தளித்த விஷால் லைக்கா நிறுவனத்திடம் சில ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இதன் பின்பு லைக்கா நிறுவனத்திடம் பணத்தை பெற்று அன்பு செழியனிடம் வாங்கிய கடனை அடைத்தார் விஷால். ஆனால் லைக்கா நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நேர்மையாக நடந்து கொள்ளாத விஷால், வழக்கம்போல் லைக்கா நிறுவனத்திடமும் ஏமாற்றும் போக்கினை கடைபிடித்து வந்தார். இதனை தொடர்ந்து விஷால் மீது லைக்கா நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளனர், வழக்கு விசாரணை விஷாலுக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது.

இதே போன்று, விஷாலின் தந்தை கிரானைட் பிசினஸ் செய்து அதில் பெரும் நஷ்டம் அடைந்து அவரும் கடனில் தத்தளித்து வருகிறார். இப்படி விஷால் குடும்பமே கடனில் தத்தளித்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் விஷால் நடிக்கும் படங்களுக்கு வியாபார ரீதியில் பெரிதாக எந்த ஒரு வரவேற்பும் இல்லை. அதனால் கடனை அடைத்து மீண்டு வருவதற்கு விஜய் சேதுபதி பார்முலாவை கையில் எடுத்துள்ளார் நடிகர் விஷால்.

சமீப காலமாக கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன் நடிகர்கள் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்த பின்பு தற்பொழுது பழ மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் பிஸியாக இருக்கிறார், அதே நேரத்தில் ஹீரோ சம்பளத்திற்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி சம்பளம் வாங்கி வருகிறார். இவரை போன்று நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்க பெரும் தொகையை சம்பளத்தை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இவர்களை பின்பற்றி விஷால் கடனிலிருந்து தப்பிப்பதற்காகவும், அடுத்து தன்னுடைய சினிமாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விஜய் சேதுபதி மற்றும் எஸ் ஜே சூர்யா ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார், நடிகர் விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது, இந்த படத்தில் பல வில்லன்கள் நடிக்கிறார்கள் அதில் நடிகர் சஞ்சய்தத் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் பிரித்விராஜ் மற்றும் அர்ஜுன் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்கள் நடிக்க மறுத்துவிட்டனர். அடுத்து அரவிந்த்சாமி மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் விஷால்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு அமைந்தது போன்று தன்னுடைய கதாபாத்திரம் முக்கியதுவம் இருக்க வேண்டும் என கேட்டு கொண்ட விஷால், படத்தின் கதையையும் கேட்டுள்ளார். மேலும் தான் விஜய் சேதுபதி பார்முலாவை கையில் எடுத்துள்ளது பற்றி நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு பேசிய நடிகர் விஷால் தன்னுடைய கடன் பிரட்சனை குறித்தும் பேசியதாக கூறப்டுகிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி போன்று வில்லனாக ஒரு ரவுண்டு வருவார் விஷால் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.