அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா படங்களால் கொஞ்சம் தோல்வியை தழுவிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ள இத்திரைப்படம் அண்மையில் வெளியானது. தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி இருப்பதாக நடிகர் விஷால் சக்சஸ் மீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளேன். அதை கண்டிப்பா செய்வேன். ஒன்பது வருஷமா சினிமாவுல இருக்கேன். இதில் பலமுறை தோல்வியை தழுவினாலும் மீண்டும் எழுந்து வந்திருக்கிறேன். சினிமா என்பது எல்லோருக்கும் ஆனது. இதில் யாரையும் யாரும் தடுக்க முடியாது. கண்டிப்பா தொடர்ந்து இதேபோல நல்ல படங்களை என்னோட ரசிகர்களுக்காக கொடுப்பேன்.
தயவுசெஞ்சு என்னோட கல்யாணத்தைப் பத்தி கிசுகிசு எல்லாம் எழுதாதீங்க.. என்னை பத்தி என்ன வேணா எழுதுங்க.. எந்த ஒரு நடிகையின் வாழ்க்கையும் தேவையில்லாமல் வீணாக்க வேண்டாம். எனக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அது முடிவா ஆயிடுச்சின்னா உங்களுக்கு நானே சொல்லிடுவேன் என மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் நடிகர் விஷால் பேசியுள்ளார்.
இன்னிலையில் இந்த படமா நூறு கோடி வசூலித்தது என்று ரசிகர்கள் வறுத்தெடுத்த வருகின்றனர். நடிகர் விஷால் தளபதி விஜய்யின் பெயரையும், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் பெயரையும் பயன்படுத்தியே தல தளபதி ரசிகர்களை ஒன்றாக தியேட்டருக்கு வர வைத்து கல்லா கட்டி விட்டனர் என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும் மார்க் ஆண்டனி டிரெய்லரை பார்த்து உள்ளே வந்த ரசிகர்களை கடைசி வரை தூங்காமலும் தியேட்டரை விட்டு துண்டைக் காணோம் துணியக் காணோம் என ஓட விடாமல் பார்த்துக் கொண்டது ஆதிக் ரவிச்சந்திரன் வைத்த அஜித் படங்களின் ரெஃபரன்ஸ் மற்றும் ஆரம்பத்திலேயே விஷால் போட்ட தளபதி விஜய்க்கு தேங்க்ஸ் கார்டு தான் எனவும் கூறுகின்றனர். மொக்கை படத்தை எங்கிட்ட கொடுத்தாலும், மாஸ் படமாக மாற்றி விடுவேன் என நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா படம் முதல் பாதிக்கு மேல் படுத்தே விட்ட நிலையில்,
வித்தியாசமான நடிப்பால் தூக்கி நிறுத்திய தூண் எஸ்.ஜே. சூர்யாவால் தான் என நடுநிலையான ரசிகர்கள் எஸ்.ஜே. சூர்யாவையும் அவரது அசுரத்தனமான நடிப்பையும் பாராட்டி வருகின்றனர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு பிறகு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது யாரென்றால், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கேஜிஎஃப் படத்துக்கு மியூசிக் போட்டதை போல காது கிழிய வைத்த ஜிவி பிரகாஷ் குமார் தான். ரஜினிகாந்த் சொன்னது போல ரீ ரெக்கார்டிங் முன்பு வரை ஜெயிலர் சுமாருக்கும் மேலான படம் என பேசி அனிருத்தை பாராட்டியது போல,
இந்த படத்தில் ரீ ரெக்கார்டிங் மற்றும அந்த 3 பழைய பாடல்களை ஜிவி பிரகாஷ் பயன்படுத்தவில்லை என்றால் விஷாலுக்கு இந்த முறை பலத்த அடி விழுந்திருக்கும் என்றும் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் மார்க் ஆண்டனி படம் 100 கோடி வசூல் ஈட்டியதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு மற்றுமொரு காரணம் வேற யாரும் இல்லைங்க நம்ம சில்க் ஸ்மிதா தான். சிலுக்கா என எஸ்.ஜே. சூர்யா மீசை சாராக போட்ட ஆட்டம் தான் படத்தை டாப் கியர் போட்டு கொண்டாட வைத்தது என்றும் கலாய்த்து வருகின்றனர்.