தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, அதில் குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டு. நடிகர் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, விஷால் மற்றும் யோகிபாபு ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதில் நடிகர் விஷால் மீது ரெட் கார்டு விதிக்கும் அளவுக்கு அவர் செய்த தில்லாலங்கடி என்ன என்பது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், தொடர்ந்த தொடர்ந்து நாணயம் இல்லாமல் நடந்து வரும் விஷால் இறந்தவர் ஒருவர் பணத்தை ஏப்பம் விடும் சம்பம் அரங்கேறியுள்ளது. நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியான படம் சின்னத்தம்பி. இந்த படத்தின் தயாரிப்பாளர் பாலு. இவர் கொரோனா தொற்று காரணமாக மறைந்துவிட்டார்.
இவர் மறைவதற்கு முன்பு நடிகர் விஷால் வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அப்போது விஷால் தனக்கு பொருளாதார சிக்கல் இருப்பதாக தெரிவித்து படம் தொடங்குவதற்கு முன்பே பணம் கேட்டுள்ளார். படத்தில் நடிக்கும் போது வாங்கிய தொகையை கழித்து கொள்ளலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் விஷாலுக்கு ரூபாய் 7 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் பாலு.
இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக பாலு மரணம் அடைத்தார். இதனை தொடர்ந்து பாலு தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுத்து அவர் குடுப்பத்திற்கு நல்ல லாபத்தை பெற்று தருவேன் என நடிகர் விஷால் உறுதியளித்துள்ளார் ஆனால் அதற்கான வேலைகளில் அவர் இதுவரை தொடங்கவில்லை. இதனை தொடர்ந்து நடிகர் விஷால் மறைந்த பாலுவிடம் வாங்கிய பணத்திற்கு சொன்னது போன்று ஒரு படத்தில் நடிக்க கால் சீட் கேட்டு பல முறை பாலு மனைவி தரப்பில் இருந்து பேசப்பட்டு முறையான பதில் ஏதும் விஷால் தரவில்லை.
இந்த நிலையில், ஒரு கட்டத்தில் விஷால் கால் சீட் தரவில்லை என்றாலும் பரவாயில்லை என மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்களின் மனைவி தன்னுடைய கணவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தரும்படி விஷாலிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. இதனால் தன்னுடைய கணவர் பாலுவிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் விஷால் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து இருந்தார் தயாரிப்பாளர் பாலு அவர்களின் மனைவி என்று கூறப்படுகிறது.
மேலும் பிரபல பைனான்சியர் அன்பு செழியனிடம் வாக்கிய கடனை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த விஷால் மற்றவர்களிடம் காட்டு அதே போர்ஜரி வேலையை அன்புச்செழியனிடம் காட்டியுள்ளார். ஆனால் அன்புசெழியன் கொடுத்த நெருக்கடியில் தப்பிக்க முடியமால், லைக்கா நிறுவனத்திடம் சில ஒப்பந்தம் செய்து அவர்களிடம் வாங்கிய பணத்தில் அன்புசெழியன் கடனை அடைத்துள்ளார் விஷால்.
ஆனால் லைக்கா நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நேர்மையாக நடந்து கொள்ளாமல் வழக்கம் போல் தன்னுடைய போர்ஜரி வேலையை அவர்களிடமும் காண்பித்துள்ளார் விஷால். இதனால் விஷால் – லைக்கா இடையிலான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இப்படி விஷால் மீது பல்வேறு புகார் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வருகிறது, இதில் குறிப்பாக மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பியும் தராமல்,
அவர்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கால் சீட்டும் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்த விஷாலை இறுக்கி பிடித்து மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையில், விஷால் பணம் வாக்கியவர்களிடம் நாணயமாக நடந்து கொள்ளவில்லை என்றால், ரெட் கார்டு விதிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது என கூறப்படுகிறது.