நடிகர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பிடிவாதமாக இருந்து வருகிறார். நடிகர் விஷால் சிங்கிளாக இருப்பதால், அவருடன் நடிக்கும் நடிகைகள் எளிதில் கிசுகிசுவில் சிக்கி விடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் அனிஷாவும் தனது இணையதள பக்கத்திலிருந்து விஷாலுடன் எடுத்த புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.அதனை தொடர்ந்து அனிஷாவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் முடித்துள்ளது.
இப்படி நடிகர் விஷால் , நடிகை வரலக்ஷ்மி இருவரும் காதலித்து வந்தது சினிமா வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபட்ட நிலையில் இவர்கள் காதல் பிரேக் ஆப் ஆனது அதனை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனன் உடன் கிசு கிசுவில் சிக்கி, அடுத்து அனிஷா என்கிற பெண்ணுடன் நிச்சயம் வரை சென்று நின்றது.
இதற்கிடையில் தற்போது விஷாலுக்கு மீண்டும் திருமணம் என்ற தகவல் பரவி வருகிறது. நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும் விஜய் வசந்த்தின் ஜோடியாகவும் நடித்திருப்பார் அபிநயா. இவர் விஷாலுடன் பூஜை, மார்க் ஆண்டனி படங்களில் நடித்தார். இந்த சூழலில், அபிநயாவை விஷால் மணமுடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அபிநயா இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “நான் இப்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். என்னுடைய சின்ன வயது நண்பரை தான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன். 15 வருடமாக இந்த உறவு தொடர்ந்து வருகிறது. அவரிடம் என்னால் எதையும் மறைக்காமல் உண்மையாக பேச முடியும். என்னை பற்றி அவர் ஜட்ஜ்மெண்ட் எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார்.
விஷால் மிகவும் தங்கமான மனிதன். மிகவும் பாசிட்டிவான ஆள். என்னிடம் சைன் லாங்குவேஜ் எல்லாம் கற்றுக் கொடுக்கச் சொல்லி கேட்பார். நாங்கள் செட்டில் ஒன்றாக தான் சாப்பிடுவோம். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். எங்களை பற்றி வரும் வதந்தி மிக முட்டாள்தனமானது. விஷால் எனக்கு ப்ரபோஸ் செய்ததாகவும், நான் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகிறது.
இதையெல்லாம் வயித்து பிழைப்பிற்காக வதந்தியாக கிளப்பி விடுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நீங்கள் சந்தோஷமா இருந்தால் சரி தான்.” என்று தெரிவித்துள்ளார் அபிநயா, இந்த நிலையில் இதற்கு முன்பு தன்னுடைய திருமணம் குறித்து பேசிய விஷால். எனக்கு திருமணம் என்று பரவி வரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது. என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து அவருடைய அடையாளத்தை கெடுக்கிறீர்கள் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.